Primary tabs
பிறந்த ஊர், தொண்டை மண்டலத்தைச் சார்ந்த குன்றத்தூர். இவர் சிறந்த
தமிழ்ப்புலமையும் நாவன்மையும் பெற்று அட்டாவதானியாக விளக்கம்
பெற்றிருந்தனர். இவர் இந் நூலாசிரியரான பொய்யாமொழியார் மரபில் வந்தவர்.
இவர் 17 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் சேலம் கணக்கத் தெருவில்
வாழ்ந்து வந்தார். அது காலத்தில் இக் கோவைக்கு உரையும், சேலம்
தலபுராணமும், சுகவனநாதர் தோத்திர நூல்களும் இயற்றினார் என்பர். நாவலரின்
மரபில் வந்தவர்கள் சேலம் வழக்குரைஞர் கப்பராய முதலியாரும் இவரின்
புதல்வர் கனகராய முதலியார் எம்.ஏ., பி.எல்., ஆன பெருநிலக் கிழவரும் ஆவர்.
நூற்றாண்டில் தாரமங்கலம் முதலிய இடங்களில் குறுநில மன்னர்களாக இருந்து
சிவபெருமான் திருக்கோயில்கள் பல கட்டுவித்தமை துருக்கங்களாலும்
சாசனங்களாலும் தெரிகின்றது. இன்னும் இவ் வுரையாசிரியரைப் பற்றிய விரிந்த
வரலாறுகள் அறிதற்கரியனவாக இருக்கின்றன.