Primary tabs
5. போர் பாடியது
இனி,  அக்காலப்  போர்க்களக்  காட்சியை   ஒருவாறு   காட்டுவாம்:
 
 எடுமெனு  மொலியும்,  விடுமெனு  மொலியும்,  வீரர்  ஒருவரோடு  ஒருவர்
 நெரித்துப்  போர்புரியும்  ஒலியும்  போர்க்கள  முழுதும்   நிறைந்திருக்கும்,
 நால்வகைப்   படைகளுள்    ஒவ்வொரு   வகைப்   படையும்   அவ்வவ்
 வகைப்படையுடனேயே  பெரும்பாலும்  பொரும்.  அரசர்   அரசருடனேயே
 பொருவர்.  யானைகள்   ஒன்றோடொன்று   எதிர்   நின்று   துதிக்கையை
 
 முறுக்கிப்  போர்புரியும் . சில  வீரர்  யானையொடு பொருவர். சிலர் குதிரை
 வீரரொடு   பொருவர்.  சிலர்  யானை   வீரரோடு   பொருவர்.  அம்பைக்
 கைக்கொண்டு  மாற்றார்மேல்  எறிவர்  சிலர்.  உலக்கை கொண்டு பொருவர்
 
 பலர்.  ஒட்டகங்களையும்   போரில்   பயன்படுத்தினர்.  தலைவரை  இழந்த
 
 ஒட்டகம்,  குதிரை,  யானை   என்பவை   போர்க்களங்களில்   கண்டவாறு
 
 திரியும்.  அம்பு  ஒழிந்த  வீரர்கள்  தம்  மார்பிற் பாய்ந்திருக்கும் அம்பைப்
 பறித்து,  வில்லிற்றொடுத்து  எய்வர்.  உடைவாள் கொண்டு பொருது, ஒருவர்
 வாள்  ஒருவர்  உடலுள்  அழுந்த  இருவரும் ஒருவராய்ச் சேர்ந்து விழுவர். 
_________
6. நூலின் உள்ளுறை நயம்
தென்தமிழ்த் தெய்வப்பரணி
பரணி   நூல்    வகையுள்    முதன்முதலாகத்    தோன்றியது  இக்
 
 கலிங்கத்துப்   பரணியேயாம்.    இதுவே    பரணி    நூல்களுக்கு   ஒரு
 
 வழிகாட்டியாய்  அமைந்து,  பரணி  நூல்களுள்  தலைசிறந்தும்  நிற்கின்றது.
 இதை இயற்றியார்   'பரணிக்கோர்   சயங்கொண்டான்'   எனப்  பேர்பெற்ற
 
 பெரும்  புலவராவர்.  தங்காலத்துப்  பேரரசனாய்த் திகழ்ந்த குலோத்துங்கன்
 
 தன்  படைத்  தலைவனான  கருணாகரனைக்  கொண்டு, கலிங்கம்  அழித்த
 பெரும்போர்ச்  செய்தியை
	
	
 
						