Primary tabs
முன்னுரை
யேல் என்னும்
அடுக்கு. தாலோ, தாலேலோ என இணைத்தும் தால் எனத்
தனித்தும் மரீஇயிற்று. இது ஏழாந் திங்களில்
நிகழ்வது.
சப்பாணிப் பருவம்:-
இருகைகளையும்
ஒருங்குசேர்த்துக் கொட்டும்
பருவம். இஃது ஒன்பதாந் திங்களில் நிகழ்வது.
முத்தப் பருவம்:-
குழந்தையை முத்தம்
தருமாறு தாய் தந்தை
முதலியோர் வேண்டும் பருவம். இது பதினோராத் திங்களில் நிகழ்வது.
வருகைப் பருவம்:-
நடக்கும் பருவக் குழந்தையைத்
தம்பால் நடந்து
வருமாறு தாய் தந்தை முதலியோர் வேண்டுதல். இது பதின்மூன்றாந்
திங்களில் நிகழ்வது.
அம்புலிப் பருவம்:-
சிறுமியர் சிறு
வீடுகட்டி விளையாடுகின்ற காலை
அதனைச் சிறுவர் தம் காலால் அழித்துக் கெடுத்தலைக் கூறுகின்ற
பருவம்.
இதிற் சிறுமியர் ‘எம் வீட்டை அழிக்க வேண்டா’ என வேண்டுவதாகக்
கொண்டு அமைத்துக்
கூறுவது, இது பதினேழாந்திங்களில் நிகழ்வது.
சிறுபறைப் பருவம்:-
குழந்தை சிறுபறை
கொட்டுகின்ற பருவம். இது
பத்தொன்பதாந் திங்களில்நிகழ்வது.
சிறுதேர்ப் பருவம்:-
சிறுதேர் உருட்டி
விளையாடு தலைத்தெரிவிக்கும்
பருவம், இது இருபத்தொன்றாம் திங்களில் நிகழ்வது.