Primary tabs
திருமணநாள் வந்தது. நான்முகன் திருமண வேள்விப் பொருள்களைக் கொண்டு வந்து சேர்த்தான். சிவபிரானும் உமாதேவியும் ஓர் இருக்கையில் அமர்ந்தனர். வள்ளியம்மையை வளர்த்த வளர்ப்புத் தந்தையாகிய நம்பிராசன், "சிவபெருமானுடைய அழல்விழியில் தோன்றிய முருகப்பெருமானுக்கு என்னுடைய வளர்ப்பு மகளைக் கொடுத்தேன்" என்று தன்முறை வழிப்பெயருங் கூறித் தன் மனைவியைத் தானநீர் வார்க்கச் செய்தான். நாரதமுனிவர் மறைமுறைப்படி திருமண வேள்வியைச் செய்தார். முருகப்பெருமான் வள்ளியம்மையை ஏற்ற அப்பொழுதே வள்ளியம்மைக்குத் தெய்வ ஒளி உண்டாகியது. கண்கள் இமைக்கவில்லை. உருவத்தில் நிழல் உண்டாகவில்லை, மாலை வாடவில்லை, உடலில் அழுக்குகள் சேரவில்லை, மாலையில் வண்டுகள் பொருந்தவில்லை. தெய்வத்தன்மை உண்டாகியது. இதனைக் கண்டோர் மிகுந்த வியப்படைந்தனர். திருமணமானவுடன் முருகப்பெருமான் தம்முடைய தாய் தந்தையர்களை வணங்கினார். அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விடையருளுதல்
திருமால் நான்முகன் முதலிய அனைவரும் விடை பெற்றுக் கொண்டு தத்தம் இருப்பிடங்கட்குச் சென்றனர். அனைவருஞ் சென்றபிறகு வள்ளியம்மை தேவயானையின் அடிகளில் விழுந்து வணங்கினாள். தேவயானை வள்ளியம்மையை அணைத்தெடுத்தாள். எனக்குத் தங்கைபோலச் சிறந்த துணையாக வந்தனை என்று கூறிப் பாராட்டினாள். முருகக் கடவுளைப் பார்த்து, "இவள் யார்? வேடர் வழிமுறையில் ஏன் பிறந்தாள் ?" என்று உசாவினாள். முருகவேள் இவர்கள் இருவருடைய வரலாற்றையுங் கூறினார். மேலும் அவர்களைப் பார்த்து, "ஒரு காலத்தில் கண்ணுவ முனிவர் திருமாலைப் பார்க்கும் பொருட்டு வைகுந்தத்திற்குச் சென்றார். திருமால் உபேந்திரன் முதலியோர் சூழத் திருமகளோடு எழுந்தருளியிருந்தார். கண்ணுவ முனிவரை ஒரு பொருட்படுத்தாமல் இருந்துவிட்டார். திருமாலின் செய்கையைக் கண்டு கண்ணுவ முனிவர் வெகுண்டார். 'இத்திருமால் பல பிறப்புக்களை யெடுக்க' என்று வசவுரை வழங்கினார். 'பல பிறப்புக்கள் மானாகப் பிறக்கக் கடவை' என்று திருமகளுக்கும் வசவுரை கொடுத்தார். உபேந்திரன் முதலியோரைப் பார்த்து, 'நீங்கள் பலமுறை வேட்டுவப் பிறவியை எடுங்கள்' என்று கூறி மீண்டார்.
"கண்ணுவ முனிவரின் கடுமையான வசவுரைகளைக் கேட்ட திருமால் முதலானோர் அஞ்சி நடுங்கினார்கள். சிவபூசை செய்து சிவபெருமானைப் போற்றினார்கள். சிவபிரான் கண்ணுவ முனிவரை அழைத்து, 'இவர்கள் செய்த பிழைக்காக ஒரு பிறவியோடு