தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1


v
முன்னுரை

அவர்களிடம் அறிவித்தபோது, அவர்களும் உளம் மகிழ்ந்து விரைவில் வெளியிட அன்புடன் கூறி எனக்கு ஊக்கம் ஊட்டினார்கள். அவர்கட்கும் எனது வணக்கம் உரித்தாகும். இந்த விளக்க உரையினை அன்பு கூர்ந்து வாசித்து, இதற்கு ஆசி உரை வழங்கி, வாழ்த்தியருளிய திருக் கயிலாய பரம்பரைப் பொம்மைய பாளையம் பெரிய மடம் திருமயிலம் தேவத்தான ஆதீன பரம்பரைத் தர்மகர்ததத்துவம் பதினெட்டாம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகளின் பொன்னார் திருவடிகளைப் போற்றி வணங்குகின்றேன். இவ்வாறே வாழ்த்துரை தந்தருளிய எனது இயற்றமிழ் ஆசிரியர் மகாவித்துவான் மே. வீ. வேணு கோபாலப் பிள்ளை அவர்களின் திருவடிகளையும் வந்தித்து வணங்குகின்றேன்.

தமிழ் நாட்டின் தனிப் பெரும் முதல் அமைச்சராய்த் திகழ்பவரும், சேக்கிழார்திருமரபில் தோன்றியவரும் ஆகிய பெரும் மதிப்புக்குரிய, திரு. எம். பக்தவச்சலம் அவர்கட்கு இவ்வுரை நூலை உரிமையாக்க இசைவு நல்கும்படி அப்பெரியார் அவர்களை வேண்டினன். அவர்களும் அருள் உளம் கொண்டு இசைவு தந்தனர். அவர்கட்கும் எனது உளம் கலந்த நன்றியும் வணக்கமும் உரியன.

எனது திருமகள் திருவளர் செல்வி பா. க. தமிழ் அரசி இவ்வுரையின் பிற்பகுதியில் அமைந்த அகரவரிசைகளை ஒழுங்கு படுத்தி ஒத்திட்டுப் பார்த்தனள். அவளுக்கு எல்லா நலனும் வளனும் தந்து பல்லாண்டு வாழுமாறு திருவருள் சுரக்க அம்மை அப்பனது பொன்னார் திருவடிகளைப் போற்றிப் பணிகின்றேன்.

இந்நூலை அழகுற அச்சிட்டு உதவிய சென்னை இராயப்பேட்டை, மாருதி அச்சக உரிமையாளர்க்கும், அங்குப் பணிபுரியும் நிர்வாகிக்கும், பணியாளர்கட்கும் எனது நன்றியை அறி்வித்துக்கொள்கின்றேன்.    

“அம்மை அப்பர் அகம் 
53. விஜய விக்னேஸ்வரர் கோவில்   
தெரு, சூளை, சென்னை - 7.
12-6-64

}

இங்ஙனம்
பாலூர்.கண்ணப்ப முதலியார்

 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:34:09(இந்திய நேரம்)