தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1


viii
வளர்புகழ் வாழ்த்துரைகள்

பொழிவுரை அமைத்ததுபோல் இருக்கிறது. இப்பேருரை திருப்போரூர்க் கந்தப் பெருமான் தேவத்தான வெளியீடாக வெளிவருகின்றது. இவ்வுரை நூலை உலகம் பயன்படுத்திப் பல நலமும் பெறுவதாக. உரையாசிரியராகிய முதலியார் அவர்கள் இதுபோல் பல நூல்களுக்கு உரை எழுதி உலகுக்கு உதவிப் பெருவாழ்வு பெறுவாராக என எங்கள் ஆதி சிவஞான பாலய சுவாமிகளையும், அவர்க்கருள் செய்த முருகப் பெருமானையும் நினைக்கின்றோம்.

தமிழக அரசு அறநிலையத்துறையினர் இதுபோன்ற உரை நூல்களைத் தேவத்தானங்களின் வாயிலாக வெளியிடச் செய்து உலகுக்கு உதவி செய்வது நல்லது. முதல் அமைச்சரும் அறநிலையப் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய கனம்  M.  பக்தவத்சலம்  B.A.B.L.  அவர்கள் இது போன்ற பணிகளைச் செய்து நிறைவேற்றிப் பேரும் புகழும் பெற்றுப் பெரும் பயன் அடைவார்களாக.

மயிலம்
5-5-64 

      ----ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய
சுவாமிகள்.

_______

மகா வித்துவான்

மே. வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்கள் 

     அன்புசா லென்ற னருமை மாணவன்
     பொன்புரை குணத்தன் புலமை மிக்கவன்
     சொற்பொழி வாற்றல் தோன்றப் பேசும்
     பொற்புடை நாவலன் புகழ்பெறு நூலாம்
     சேக்கிழார் பிள்ளைத் தமிழ்க்கொரு தெளிவுரை
     மீக்கொளு மறிவான் மிளிர வியற்றிப்
     போரூர்க் கந்தன் புகழ்பெயர் கொண்டே
     பாரோர் மகிழப் பயிலுநன் னிலையம்
     வெளியிடச் செய்த வியத்தகு குரிசில்
     கண்ணப்ப னென்னும் புண்ணியப் பெயரினன்
     எண்ணிய வெண்ணியாங் கினிதுறப் பெற்றே
     ஒளியார் புகழ்மிக் கோங்கிடப் பல்லாண்
     டின்னஞ் சீரிய வெழினூ லியற்றி
     நன்னலம் பெருக வாழிவா ழியவே.

சென்னை,
12-6-64.  

                               ---மே. வீ. வே.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-02-2019 12:12:56(இந்திய நேரம்)