Primary tabs
திருநாளைப்போவார்
என்னும்
நந்தனார் சரித்திரம்.
திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிக டிரைக்கரத்தான்
முகந்துதர விருமருங்கு முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு மேற்காநாட் டாதனூர்.”
என்று சேக்கிழார் சுவாமிகளால்
சிறப்பித்துக் கூறப்பட்டவாறு கொள்ளிட நதிக்கருகே
ஆதனூர் என்றோர் ஊர் உளது. அவ்வூர்ப்
புலைச்சேரியில், அனேக வருஷங்களுக்கு
முன்னே, கள்ளிவயிற்றில் அகில் பிறப்பதுபோலவும்,
சிப்பியினிடத்து முத்துப் பிறப்பது
போலவும், மதுரைவீரன், நொண்டி, சாமுண்டி முதலிய
சிறு தெய்வங்களையன்றி
முழு
முதற் பெருங்கடவுள் ஒருவர் உண்டு, அவர்
ஒருவரே அறிவுடைய ஆன்மாக்களால்
வணங்கி வழிபடற்பாலார்
என்னும் அறிவு சிறிதும் இல்லாத புலையர்கள் குலத்தில்,
சிவனையே சிந்தித்துச் சிந்தை நைந்துருகி
அவனடிக்காட்பட்டு அந்தணர்க்கும் அறிவரிய
அப் பெருமான்பதம் அடையும் அருந்தவமுடையராய நந்தனார்
என்பார் ஒருவர்
திருவவதாரஞ் செய்தனர்.
அவர் தமக்கு உணர்வு
வந்தநாள் தொடங்கி உமையொருபாகராய
சிவபிரானிடத்து மிகுந்த பக்தியுடையராயிருந்தனர்.
தமது குலத்துக்கேற்ற தொழிலையே
செய்து
_____________
* பெரியபுராணம்.