தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நந்தனார் சரித்திரம்


தமது வாழ்நாளைப் பிறர்க்குப் பயன்படுத்திக் கழித்தல்வேண்டும் என்ற உறுதிகொண்டார்.
இவ்வுறுதியோடு துறவியாய் வெளிப்பட்டு, பொன்மாலை பூமாலை முதலிய
பன்மாலையினும், பக்தர் பாமாலைக்கே பக்ஷமுடையவரான பரமனைப் பக்திச்
சுவைநிரம்பிய கீர்த்தனைகளாற் பாடிக்கொண்டு வீதிகளிற் செல்வதும், பசித்தால்
பிச்சையேற்று உண்பதும், அயர்வுற்றால் புறந்திண்ணையொன்றிற் படுத்து உறங்குவதுமாக
விருந்தார். அவரது கீர்த்தனைகளைக் கேட்ட ஜனங்கள் அவரது இசைப் புலமையை
வியந்து அவரைச் சூழ்ந்து தொடர்வார்கள். அவர் அகத்து மறைந்து கிடந்த புலமையின்
அருமையும் உள்ளப் பெருமையும் சின்னாளில் வெளிப்பட்டு நாடெங்கும் பிரபலமாயின.
பலர் அவரைப் பயபக்தியுடன் அணுகி அவருக்குப் பணிவிடை செய்வதும் தம்
இல்லத்துக் கெழுந்தருளவேண்டும் என்று பிரார்த்திப்பதுமாயினார்கள். பலர் அவர்க்குச்
சீஷர்களானார்கள். இங்ஙனம் கூடிய சீஷர்களில் ஒருவராவர், மாயூரம்
முனிசீப்பாயிருந்தவரும், பிரதாபமுதலியார்சரித்திரம் முதலிய கதைகளின் ஆசிரியரும்,
சர்வசமயசமரசக்கீர்த்தனை இயற்றிய வருமான வேதநாயகம் பிள்ளை என்பவர். இது
நிற்க.

அக்காலத்தில் நாகபட்டினத்தில், கந்தப்பசெட்டியார் செல்லப்பச்சந்திர
செட்டியார்
என்றிருவர் சகோதரர் பிரபல தனவந்தர்களாயும், சிவபக்தியிற்
சிறந்தவர்களாயு மிருந்தார்கள். அவர்கள் கோபாலகிருஷ்ணபாரதியாரின் பெருமையைக்
கேள்வியுற்றபோது, அவரைத் தம் அகத்துக்கு அழைத்துவந்து ஒரு சிவகதையைப் பாடச்
சொல்லிக் கேட்கவேண்டுமென்று விரும்பினார்கள். அப்பொழுது பாரதியார் சிதம்பரத்தில்
இருந்தனர். கந்தப்பசெட்டியார்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-02-2019 14:53:50(இந்திய நேரம்)