தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நந்தனார் சரித்திரம்


பாலும் கொண்டுவந்து அவர் எதிரே வைத்தனர். அதே சமயத்தில் பாரதியார் மனத்தில்
நந்தனார் சரித்திரத்தைப் பிரசங்கிக்கலாம் என்ற ஓர் உணர்வு தோன்றியது.
அவ்வுணர்வைப் பின்பற்றிப் பிரசங்கிக்கத் தொடங்குகையில் தம் எதிரே வைக்கப்பெற்ற
பழங்களைக் காணவும், தொனியொற்றுமைபற்றிப் பழனம் என்றசொல் அவர் ஞாபகத்தில்
வந்தது. உடனே அச்சொல்லையே முதலாகக்கொண்டு ‘பழன மருங்கணையும்’ என்ற ஒரு
சிந்தினால் நந்தனார் சரித்திரத்தை முற்றும் பாடி அதைத் தாமே ஏட்டில் எழுதிக்
கொண்டனர். பிறகு அச்சிந்தைப் பீடிகையாக வைத்துக் கொண்டு எடுத்துக்கொண்ட
சரித்திரத்தை அழகுற விரித்து விளக்கிமூன்று நாட்கள் தொடர்ந்து பிரசிங்கித்து முடித்தார்.

பக்தியிற் சிறந்த நந்தனார் சரித்திரம் இயற்கையாகவே பாலினும் இனியது.
பாரதியார் திருவாக்கினின்றும் வெளிவந்தபோது அது பாலோடு சர்க்கரையும்
கலந்தாற்போல் மிகவும் இனிமையாயிருந்தது. இச்சரிதத்தைக் கேட்க வென்று, நாகையைச்
சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் பலர் வந்து கூடினர். அப்படி வந்து கூடியவர்களிற் சிலர்,
காரைக்கால் என்னும் நகரில் சீசய்யா என்னும் ஒரு பிரான்சு துரையின் ஆபீஸில் உள்ள
இந்திய உத்தியோகஸ்தர்களாவார்கள். இவர்கள் மூன்றுநாள் தொடர்ந்தாற்போல் நாகைக்கு
வந்து இரவெல்லாம் கண்விழித்துப் பொழுது விடிந்ததும் காரைக்காலுக்குச் சென்று தமது
உத்தியோகத்தைச் செய்யும்படி நேர்ந்ததால், தமது வேலையைச் செவ்வனே செய்ய
இயலாமல் உறக்கமுற்றிருந்தார்கள். தம்மிடத்து உத்தியோகம் செய்யும் இந்துக்கள்
அனைவரும்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-02-2019 14:54:59(இந்திய நேரம்)