தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Preface Page


நூலாராய்ச்சி
xv
 

அங்கிருக்கக் கண்டவுடன் என் மனம் பூரித்தது. பின்னர்ச் சீதக்காதி
மரக்காயர்சமுகத்தில் நான் கொண்டுபோய் விடப்பட்டேன்.

அப்போது, ‘கானுலாவிய கொடையான் செய்தக்காதி’ கொலுவீற்றிருந்தார்.
மீராப்பிள்ளை மரக்காயர், குட்டியாலிப் பிள்ளை, மாமு நயினார்ப்பிள்ளை,
சேகுக்கன்று முதலிய சுற்றத்தினர் அவரைச் சூழ்ந்திருந்தனர். அங்குச் சந்த
முத்தமிழ் தேறுங் கல்வித் தலைவர் மகிழ் உமறுப்புலவரும் செந்தமிழ்க்
கந்தசாமிப் புலவரும் இருந்தனர். கரணிகர் வாய் புதைத்துக் காரியஞ் சொல்ல,
வர்த்தகர் உத்தரஞ் சொல்ல, குச்சலியர் நகைகள் கொண்டுவந்து
தெண்டனிட்டுக் கண்டு வணங்க, மத்தளம் முழங்க, தாள மியங்க,
தம்பூருவாத்தியங்கள் கொண்டு பலர் கீர்த்தனம் பாட, முதுதமிழ்க் கவிராசர்
பத மிசைக்க, சங்கநிதி பதுமநிதி போல நிதிவாரிச் சடையாமல் இருகையுங்
கொடுக்க, சிறந்த சிங்காசனமொன்றில் செய்தக்காதி சிலைமதனைப்போலக்
கொலுவீற்றிருந்தார்.

இவற்றையெல்லாம் பார்த்த யான், அடைக்கலங்காத்த பெருமான்,
மன்னவர்க்கரசு நிலைநிறுத்துஞ் செய்தக்காதிக்குத் தண்டனிட்டு வணங்கி
நின்றேன். அவர் பண்டு பழகினவர் போல் அடியேன் கிலேசம் நீங்க
நல்வாசகஞ் சொன்னதுடன் என்னை முஸ்லிம் ஆக்கக் கருதி, என் கையில்
ஆயிரம் பொன் கொடுத்தார். நானும், பேரான ஸதக்கத்துல்லா முன்பாகப்
பேதமில்லாக் கலிமா ஓதினேன். பின்னர் ‘ஹஜ்’ செய்யும்படி எனக்குச்
சொல்லினர். நானும் ஸதக்கத்துல்லாவுடன் ‘சலாம்’ சொல்லிக்கொண்டு,
‘சற்குண நிதியனையான் செய்தக்காதி தாமரைத்தாளுக்கும் சலாம் உரைத்து’,
மக்காவுக்குப் பிரயாணமானேன்.

கடற்றுறைவழியே சென்று கடந்து, இறங்கி, மக்காவும் கஃபத்துல்லாவுங்
கண்டேன். அங்கு லெப்பைமார், சறீபுகள், அறபிகள், சைய்யிதுகள், ஷைகுகள்,
மோதின்கள் பலருங் கூடியிருந்தனர். அவர்களுக்கு என் வணக்கத்தைச்
செலுத்தியபடியே அடியேன் மேலோனைத் தொழு தொருபா லிருந்  


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:48:51(இந்திய நேரம்)