தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM

அதில் சிறுவர்கள் தோணிவிடுங் காட்சியையும், மன்னர்களின் மகுடமணி ஒளிகள்
இருள் நீக்கி வெயில் தருவதையும், சுவர்களில் அணிபெறச் சித்திரிக்கப்பட்ட
ஓவியங்களையும் கண்டு கண்டு மயங்கி மகிழ்ந்து அரண்மனைத் தலை வாயிலை
அடைந்தனர். அங்கிருந்து சென்று ஆங்காங்குக் கிடந்த திறைக் குவியல்களைக்
கண்டு மயங்கி நின்று அரசர் படையுடன் நெருங்கி ஊடுருவி இன்னல் பல
அடைந்து, தேறித் துவார பாலகர் காவலிடத்தை அடைந்தார். அவ்வாயிற்
காப்பாளரைப் பரம பத்தர் என்று பாராட்டித், தாம் இளமையில் கண்ணபிரானுடன்
அவந்தியில் சாந்தீப முனிவரிடம் கலை பயின்ற பள்ளித் தோழர் என்றும், தம்
பெயர் குசேலர் என்றும், தம் வரவைக் கண்ணபிரானுக்கு எடுத்துரைக்க
வேண்டுமென்றும் கேட்டார். இதனைக் கேட்டுப் பக்கம் நின்ற அறிவீனர் சிலர்,
இவர் கண்ணணைக் காண்பதற்குத் தகுதியற்றவரென்றும், காண்பார் பொருளுடன்
ஏவலர் பலர் சூழ்ந்திருப்பவராயிருக்க வேண்டுமென்றும், இவர்க்கு ஆண்டு
முதிர்ந்தும் அறிவு முதிரவில்லை என்றும், பலபடியாக இழித்துப் பழித்துப் பேசினர்.
இவர் வந்த வழியே திரும்புதல் நலமாகுமென்றும் கடிந்து பேசினர். இக்கடு
மொழிகளைக் கேட்டுத் தம் வறிய நிலைக்கு வருந்திக் கவலையுற்று நின்றார்
குசேலர். அம்முனிவரைக் கண்ட துவார பாலகர் முனிவர் பெருமையை அறியாது
வெற்றுரை தொடுத்த வீணர்களை நோக்கி, உண்மை ஞானிகள் இயல்பையும்
அவர்கள் பற்றற்றுப் பித்தர்போல் திரியும் இயல்பையும் விரிவாக எடுத்து
விளக்கினர். பின்னர்க் குசேலரை வெளி வாயிலில் இரக்கச் செய்து காவலர்
எழுபத்திரண்டு வாயில்களையும் கடந்துபோய்க் கண்ணபிரான் தனித்திருக்கும்
அந்தப்புர வாயிலைக் காக்கும் மங்கையரிடம் தம் வரவை அரசர் பெருமானிடம்
தெரிவிக்கும்படி கூறினர். அங்ஙனமே சென்ற காவல் மங்கையர் அரசனை
அடுத்துப் பணிந்து நின்று துவார பாலகர் வரவைத் தெரிவித்தனர். கட்டளை அறிந்த
காவலர் விரைந்து போய் அரசன் அடி


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:50:53(இந்திய நேரம்)