தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM-குசேலோபாக்கியானம் கதைச் சுருக்கம்

குசேலோபாக்கியானம் கதைச் சுருக்கம்

1.குசேலர் மேல்கடல் அடைந்தது

சந்திரகுலத்திற் பிறந்து செங்கோல் செலுத்தி அரசு புரிந்து புகழ்பெற்ற மன்னனாகிய
பரிட்சித்து என்பவற்குச் சுகமுனிவன் கூறிய கதை இது.

கடலாற் சூழப்பட்ட பூமியாகிய மங்கைக்கு முகம்போல வடமதுரை என்ற நகர்
விளங்கியது. அந்நகரையடுத்து அவந்தி என்ற நகர் இருந்தது. செந்நெல் வயலும்
நன்னீ்ர் வாவியும் பூம் பொழில்களும் சூழ்ந்தது அந்நகர். கல்விச்சாலை, முனிவர் மடம்,
ஆடரங்கு இவைகள் எங்கும் இருந்தன. போகம் விற்கும் பொதுமாதர் தெருக்கள் பல
இருந்தன. விருந்தோம்பி வாழும் வேளாளர் தெருக்கள் பல, தம் பொருள்போற் பிறர்
பொருளையும் பேணி வாணிகஞ் செய்யும் வணிகர் தெருக்கள் பல, செல்வத்திலும்
புகழிலும் சிறந்த மன்னர் வாழும் மறுகுகள் பல, அறுதொழில் புரியும் அந்தணர்
உறையும் மறுகுகள் பல அந்நகரின் கண் உள்ளன. ஆடலும் பாடலும் நீங்காத ஆலயங்கள்
பல இருந்தன. இன்னவளம் பல செறிந்த அவந்தி நகரையடுத்துப் பெருங்காடு ஒன்று
இருந்தது.

மந்தாரம் செம்பரத்தை முதலிய மரங்கள் அடர்ந்த காடு அது. பல மலர்களிலிருந்து வழியுந்தேனும், தேன்கூடு கிழிந்தொழுகுந்தேனும், ஆங்குவாழும், யானையின் மதநீரும்
கான்யாற்றுப் புனலுடன் கலந்து கடல்போலப் பெருகிநிற்கும். விளங்கனி மாங்கனி
முதலிய கனிகள் கனிந்து மரங்களில் தூங்கும். மந்திகள் அம்மரங்களிலேறித் தாவி
விளையாடும். அக்காட்டில் மந்திகளும் ஏறி அறியாத மரங்கள் பல உள்ளன எனின்,
அதன் பெருமையை என்னென்று உரைப்பது? கண்டோர் யாவரும் இந்த வனம்
எக்காலத்தும்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:55:32(இந்திய நேரம்)