தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 

காப்பு


உலக நீதி புராணத்தை யுரைக்கவே
கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு.

(பதவுரை) உலக நீதி - உலக நீதியாகிற, புராணத்தை - பழஞ் செய்திகளை, உரைக்க -  நான் கூறுதற்கு, கலைகள் - வேதம் முதலிய நூல்களால், ஆய்வு அரும் - ஆராய்ந்து காண்டற்கு அரிய, கரிமுகன் - யானை முகத்தையுடைய விநாயகக் கடவுள், காப்பு - காப்பாவர் என்றவாறு.

(பொழிப்புரை) உலக நீதி என்னும் பழஞ் செய்திகளைச் சொல்லுதற்கு வேத முதலிய நூல்களாலும் அறியவொண்ணாத விநாயகக் கடவுள் காப்பாவர் எ-று.

உலகநீதி உலகத்தில் பண்டைக்காலந் தொடங்கி உயர்ந்தோர்களால் ஏற்கப்பட்டு வரும் நீதிகள். இவைதாம் புதியனவாகச் சொல்வனவல்ல, தொன்று தொட்டுள்ளனவே என்பது அறிவித்தற்குப் `புராணம்' என்றார்; புராணம்-பழமை; பதினெண் புராணம் முதலியவற்றைப் போல் இதனையும் புராணமென்றாரென்று கொள்ளற்க. கலைகளாய் வரும் என்பதற்குக் கலைகளின் வடிவாகி வரும் என்றுரைப்பினும் அமையும்.காப்பு - காவல்; இடையூறு வராமல் பாதுகாப்பர் என்றபடி.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:05:33(இந்திய நேரம்)