தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Sithar Padalkal

சி.எஸ். முருகேசன்

தமிழுக்கு,   வரலாற்றுக்கு, சித்தர் இலக்கியத்திற்கு ஒரு ஆய்வியல்
அறிஞரை  அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் நம் நினைவுக்கு சட்டென
வருபவர் திரு சி.எஸ். முருகேசன் அவர்கள்தான்.

எழுத்துலகில் ஏறத்தாழ பொன்விழாவைக்  கொண்டாடத் தயாராகும்
இந்த எழுத்தாளர் தமது  இனிய எழுத்துக்களால் வாசகர்  நெஞ்சங்களைக்
கொள்ளை  கொண்டதுடன்  அவர்களின்  சிந்தனைக்கும்  வழிகாட்டியாக
உள்ளார்.

புதுச்சேரி  மண்ணில்  பிறந்த  இவர்  தாம்  பிறந்த  மண்ணுக்காக
வரலாற்று, கலை, கலாச்சார, இலக்கியங்களைப் படைத்துப் புகழ் சேர்த்தவர்.

அரிய  சித்தர்  பாடல்களை,  சித்தர் ஞான சூத்திரம், கற்ப சூத்திரம்,
நவநாத  சித்தர் பாடல்கள், சித்தர் பழமொழிகள் என வகைப்படுத்தியதுடன்
சித்தர்   பாடல்களை   முழுமையாகக்   கொண்டு   வரவேண்டும்  என்ற
நோக்கத்துடன் இத்தொகுதியினைத் தொகுத்து அளித்துள்ளார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:08:15(இந்திய நேரம்)