தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


19

1857 பாடல்களையும் வகைதொகை  செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு
பக்கத்திலும் அடிக்குறிப்புக்களை இட்டால், படிப்பவரின் ரசனைக்குத்
தடங்கல் ஏற்படுமாதலால்,    அடிக்குறிப்புகள், நூலின் பிற்பகுதிக்குத்
தள்ளப்பட்டுள்ளன. முழுநூலையும் படித்த   பின்னரே, நூலின் முதல்
மதிப்புரையாக விளங்கும் முன்னுரைகளை  முழுதும் புரிந்து கொள்ள
முடியுமாதலால், முன்னுரைகளும் பிற்சேர்க்கைகளாக இறுதியில்
வைக்கப்பட்டுள்ளன.

அயராது பாடுபட்டிருக்கிறார்கள். ஒரு பல்கலைக் கழகம்,வல்லுநர்
குழுவொன்றை அமைத்து, பெருத்த  பொருட்செலவில் செய்து முடிக்க
வேண்டிய ஒரு      பெரும்பணியை இளம் பேராசிரியர்கள் இருவர்-
டாக்டர் அ.கா.பெருமாள், டாக்டர் எஸ்.ஸ்ரீகுமார் நிறைவேற்றியுள்ளனர்.
‘நெஞ்சாரப் பாராட்டுகின்றன தமிழ் நெஞ்சங்கள்’.

கவிமணி சொல்லிய ஒரு நிகழ்ச்சி இங்கு நினைவுக்கு வருகிறது.
கே.கே.பிள்ளையின்   ‘சுசீந்திரம் கோவில்’ ஆய்வை வழிநடத்தியவர்
கவிமணி. தத்தம் சொந்த    ஊர்களாகிய தேரூரிலிருந்து கவிமணியும்,
வீராணியிலிருந்து    பிள்ளையும் தினந்தோறும் சுசீந்திரம் வந்து கள
ஆய்வு நடத்திக்      கொண்டிருந்தனர். ஒருநாள், வழக்கம் போலக்
கவிமணி வந்து சேர்ந்து   விட்டார். அப்போது ஒருவர், வீராணியில்
பிள்ளை வீட்டில் தலைநாளிரவு திருடு போய்விட்டதாகவும், அதனால்
அவர் வழக்கம்போல வருவாரா என்றும் ஐயமெழுப்புகிறார். ஆனால்,
குறித்த நேரத்தில் வந்து நிற்கிறார்    பிள்ளை. பிள்ளையின் ஆய்வு
ஆர்வத்தை எடுத்துக்காட்டிய அந்த  வருகையை மெச்சிய கவிமணி,
“பல்கலைக்கழகம் உனக்கு    டாக்டர் பட்டத்தைப் பின்னால் தரும்;
நான் உனக்கு இப்போதே   அந்தப் பட்டத்தைத் தருகிறேன்” என்று
ஆசி கூறினார்.

இந்த நூலைக்          கொண்டு வருவதில் இவ்விரு இளம்
பேராசிரியர்கள் காட்டியுள்ள தளரா நாட்டத்தையும்,  ஈடுபாட்டையும்
காணும் போது,     கவிமணியும், “பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே
உங்களுக்கு டாக்டர் பட்டங்களைத்   தந்து விட்டன; நான்இப்போது
மேலும் ஒரு         பட்டத்தைத் தங்களுக்குத் தருகிறேன்” என்று
நிச்சயமாகச் சொல்லி வாழ்த்தியிருப்பார்.

கவிமணியின் பாடல்களை       முதன் முதலாகத் தொகுத்து
வழங்கியது செட்டிநாட்டுப்   புதுமைப் பதிப்பகம்; அவருக்கு முதன்
முதலாக நாடறியப் பாராட்டு நடத்தியதும் நகரத்தார்கள்தாம்.தற்போது
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,   இந்நூலைப் பெருஞ்செலவில், வெளியிட
முன்வந்துள்ளது மிகவும்     பாராட்டுக்குரிய தமிழ்த் தொண்டாகும்.
எனவே          ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தின் உரிமையாளர் திரு
ஆர்.எஸ்.சண்முகம்     தமிழார்வலர்களின் மனமார்ந்த பாராட்டுக்கு
உரியவராகின்றார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:23:16(இந்திய நேரம்)