தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிரிக்கும் பூக்கள்

சிரிக்கும் பூக்கள்

அங்கிருந்த குழந்தைகளிடம் நான் ஒரு முறை பாடியவுடனே
அவர்கள் அதைத் திருப்பிப் பாடத் தொடங்கி விட்டார்கள்!

நாளடைவில், ‘அண்ணாமலை, அண்ணாமலை, அண்ணாந்து
பார்த்தால் ஒண்ணுமில்லை‘ என்ற பழைய வரிகளை அவர்கள் மறந்து
விட்டார்கள்.

     ç                         ç                       ç

என் பேரன் அரவிந்தனுக்கு அப்போது வயது மூன்று. அவனுக்கு
யாரேனும் ஊட்டி விட்டால்தான் சாப்பிடுவான். ஒருநாள், நான் அவனைப்
பார்த்து, “அரவிந்த், தினமும் யாராவது ஊட்டிவிடணுமா? சாதத்தை நீயே
உன் கையால் அள்ளிச் சாப்பிடக்கூடாதா? ஆண்டவன் நமக்குக் கை
கொடுத்திருக்கிறாரே, எதுக்காக?” என்று கேட்டேன்.

“எதுக்காக?”- திருப்பிக் கேட்டான் அரவிந்தன்.

‘ஆண்டவன் கொடுத்த கை எதற்கு?
அள்ளிச் சோறு தின்பதற்கு’

என்று பாட்டிலே பதிலளித்தேன்.

அரவிந்தன் அந்த வரிகளையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டு
ஒழுங்காக உண்டு முடித்தான்.

இதற்குப் பிறகு அவன் எப்போது ஊட்டிவிடச் சொல்லி அடம்
பிடித்தாலும், “ஆண்டவன் கொடுத்த கை எதற்கு?” என்று முதல் வரியைச்
சொன்னால் போதும்; “அள்ளிச் சோறு


    
புதுப்பிக்கபட்ட நாள் : 26-02-2019 18:47:31(இந்திய நேரம்)