Primary tabs
களுடன் அப்பாடல்களை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கும் வானொலி, தொலைக் காட்சி வாயிலாக என்னுடைய சில பாடல்களை ஒலி/ஒளி பரப்பிய நிலையத்தாருக்கும் நான் என்றென்றும் நன்றியுடையவனாயிருப்பேன்.
இத் தொகுப்பிலுள்ள பாடல்களை நன்முறையில் அச்சிட்டுத் தந்த ஜீவன் அச்சகத்தாருக்கும், வண்ணப் படங்களை அழகுற அச்சிட்ட நியோ ஆர்ட் பிரஸ் நிர்வாகிகளுக்கும் என் நன்றி.
நான் முன்பு வெளியிட்ட ‘மலரும் உள்ளம்’ என்னும் இரு தொகுதிகளிலுமுள்ள பாடல்களைப்பாடி இன்புற்றதைப் போலவே, இந்த ‘சிரிக்கும் பூக்கள்’ தொகுப்பிலுள்ள பாடல்களையும் குழந்தைகள் உலகம் படித்து, பாடி இன்புற்றால், அதுவே நான் அடையும் பேரின்பமாகும்.
‘உமா இல்லம்’
ஏ. எல்.
183
அழ. வள்ளியப்பா
அண்ணாநகர், சென்னை-40