Primary tabs
ஏறுதழுவி வரைந்துகொள்ளுதல் என்னும் முல்லைத் துறைப்பாக்கள்
கலித்தொகையிலன்றிப் பிறதொகை நூல்களில் காணுமாறில்லை.
வெறியாட்டு, மகட்போக்கிய தாயிரங்கல் என்ற துறைப்பாக்களே
கலித்தொகையில் இல்லை.
அவற்றைத் தமிழினர் அஃறிணை உயிர்களின் இன்பச் செய்கைகளை
உயர்திணைக் காதற் கண்ணோடு பார்த்தனர்.
(சங்க காலத்தில்) அரசியல் வாழ்க்கை வாழ்ந்த(வர்) பரணர் நக்கீரர்
கல்லாடர் மாமூலர்.
காதல் என்பது உள்ளப்பற்றையும் காமம் உடற்பற்றையும் குறிக்கும்.
யாண்டு தனித்திருந்தாலும் பிரிந்திருந்தாலும் இளந்தலைமக்களை
இயற்கையுயிர்ச் சோடிகள் (பறவை, விலங்கு இணைகள்) வாளாவிடா.
அஃறிணைப் பிணையல்களைக் காணும்போது, அவற்றின்
புணரொலிகளைக் கேட்கும்போது, இளம் உள்ளங்கள் பாலுணர்வை
எண்ணும், எண்ணும்.
புறநடை புகாக் காதற்பண்பு கொண்டது தமிழ் ஐந்திணை, விதிக்கு
மயிரிழை அன்ன ஊறுபாடு ஏற்படினும் ஒருசெய்யுள்
ஐந்திணையாகாதெனத் தள்ளப்படும்.
இத்தகைய அரிய கருத்தோட்டங்களால் பின்னிப் பிணைந்து கிடக்கிறது
தமிழ்காதல். மேன்மேலும் எண்ணிப் பார்க்க, ஆராய வழித்தடங்கள் இதிற்
பலவுள.
அகப் பாடல்களில் எவையெவை பாடப்படும், எவை தவிர்க்கப்படுமென
எடுத்துக்காட்டுமிடம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ‘ஐந்திணைத் துறைகளுக்குள்
விரிந்த புதினமும் ஆழ்ந்த சிறுகதையும் துடிக்கும் நாடகமும் எழுதத்தக்க
மூலக் கூறுகள் உள’. ஆனால் ஐந்திணைப் புலவன் அவற்றை விரிப்பதில்லை;
வரம்புக்குள் கட்டுப்பட்டே பாடுவான். அதன் வன்மை மென்மைகளை,
நன்மைதீமைகளை ஆசிரியர் ஆராயுமிடங்கள் அகத்திணையின் மரபுணர்ந்து
ஆழங்காற்பட்டவை.
தனித்தன்மைகள்
மூதறிஞர் வ.சுப.மாவின் உவமைகள் பழுத்த பட்டறிவின்
வெளிப்பாடுகள், புதுமையானவை. அவை சில ‘மூக்கின் உச்சிச் சுட்டுவிரல்
சேர்த்து’ வியக்கவைப்பவை. இவ்வுலகியல் சார்ந்தவை.
பழஞ்சொல் புதுக்குதல், வட்டார வழக்குச் சொல் ஆளுதல்,
புதுச்சொல் படைத்தல் அவரின் தனிஇயல்புகளாகும். அவரது
நூல்களனைத்திலும் இப் புதுமைகள் ஊடாடி, ‘மாணிக்கப் படைப்புக்கு’
அடையாளம் காட்டும். இவை சொல்லப் புகுந்த கருத்தோட்டத்திற்குப்
புறம்பாகாமல், அதனை வளப்படுத்தும் துணையாகும் சிறப்புடையன.
(பிறவீட்டுச் செய்திகளை) ‘அடுக்களைப் புகைபோல நுழைந்து காணும்
ஆசை’; (ஐந்திணைக் களவிலக்கியத்தில் தடைகள், எதிர்ப்புகள் பல