தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்



வரக் காணலியே

காதலன் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை ; அவள் அவனை நினைந்து பாடுகிறாள்.

 
ஆளுலயும் குட்டை!
அழகுலயும் பூஞ்சிவப்பு
நடையிலேயும் நைச் சிவப்பை
நடுத்தெருவில் காணலியே!
பூசரம் பழுப்பளகே
புவன சுந்தர நடையழகே
சிருப்பாணிக் கேத்த தங்கம்
தினம் வருமா இந்த வழி?
படுத்தா உறக்க மில்ல
பாய்விரிச்சா தூக்கம் வல்ல
சண்டாளன் தலைமயித்த
தலைக்கு வச்சா தூக்க முண்டு.}
 

கரும்பா இணங்குனனே
கருத்த மத யானையிடம்
துரும்பா உணருரனே
துடிக்காரா உன்னாலே
வந்திராதோ இந்த வழி?
வாச்சி ராதோ தங்கக் கட்டி?
குடுத்திராரோ வெத்திலையை ?
போட்டுறுவேன் வாய் சிவக்க
மேலத் தெருவுங் கண்டேன்
மேகம் போல வீட்டைக் கண்டேன்.
தருமர் மகனை நான்
தனியே வரக் காணலையே?
கீழத் தெருவுங் கண்டேன்,
கீழ மேலு ரோடுங் கண்டேன்,
தாவரப் பத்தி கண்டேன்,
தருமர் மகன் தலை காணேண்
பெரிய தம்மா திருகு கள்ளி
பேர் போன ரட்ன கள்ளி
மாமன் மகன் மந்திர கிளி
வந்திராதோ இந்த வழி?

வட்டார வழக்கு: நைச் சிவப்பு -நைச் சிவப்பு (Nice)(வ.வ.);விரிச்சா -விரித்தால்; வச்சா-வைத்தால்;ரட்ன-ரத்தின.

சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
தங்கம்மாள்புரம்,
விளாத்திக்குளம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:08:25(இந்திய நேரம்)