Primary tabs
ஊடல் வேம்பாச்சே !
குடும்பப் பகையால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். காதலன் பகையைப் பொருட்படுத்தாமல் அவள் காட்டுக்கு வரும்பொழுது அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். “சிறிது காலம் நமது உறவை முறித்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் விபரீதம் விளையும் ” என்று எச்சரிக்கிறான்.
சிறு கலயம் கஞ்சி கொண்டு
வருண முழி முழிச்சு
வாராளையா வடகாடு
பக்கப் புளி ஒண்டாச்சே
ஊடாலே வேம்பாச்சே
உனக்கும் எனக்கும் பகையாச்சே
வட்டார வழக்கு: ஊடாலே-நடுவில்; புளி-புளிய மரம்; ஒண்டு-ஒன்று.
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம்.