தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கமலை-2

ஆறு குளம் இல்லாத ஊர்களில் கமலை கட்டித் தண்ணீர் இறைப்பார்கள். தண்ணீர் தோட்டப் பயிர்களுக்குப் பாயும். கமலை ஓட்டும் இளைஞனைப் பார்த்து அவனது மாமன் மகள் பாடுகிறாள்.

செடியோரம் கெணறு வெட்டி
செவலைக் காளை ரெண்டு கட்டி
அத்தை மகன் ஓட்டும் தண்ணி
அத்தனையும் சர்க்கரையே
ஆத்துக்கு அந்தப் புரம்
அஞ்சாறு தென்னமரம்
வச்ச மரம் பார்க்கப் போன
மச்சான் வரக் கண்டீர்களா?

சேகரித்தவர்:
பொன்னுசாமி

இடம்:
ஓலைப்பாளையம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:50:25(இந்திய நேரம்)