Primary tabs
அறிதொறும் அறியாமை கண்டற்றால் 
 என்பது போல எழுத எழுத
 எழுதவேண்டும் எனும் ஆசை பெருக்காகிறது! இடமும் காலமும் சூழலும்
 ஒத்திசைக்கட்டும்! 
 
 
மீண்டும் ஓர் இலக்கண நூலினை எழுதும் துணிவினை எனக்கு 
 ஊட்டியவர்கள் குடந்தை, அரசினர் தன்னாட்சிக் (ஆடவர்) கல்லூரியின் 
 தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் (1999-2002) ஆவார்கள். முன்னர் எழுதிய 
 க்,ச்,த்,ப்-மிகுதலும் மிகாமையும் (1998) எனும் நூலினைக் கல்லூரியின் பாடத்திட்டக் 
 
 குழு ஏற்றதே, கைம்மாறு கருதாமல்! குழந்தையைத் தோளில் தூக்கி ஊருக்குக் 
 காட்டினீர்; குழந்தை இலக்கணத்தால் மிதிப்பதையும் தாங்கிக்கொண்டு! 
 
இந்நூலினை அவர்கள்தம்
சீரிய நல்லெண்ணங்களுக்குக்
காணிக்கையாக்குகின்றேன்!
நல்லோர் வாழி!
தமிழ்நாடு அறிவார்ந்த நாடு! The Hindu எனும் ஆங்கில நாளிதழை நாம்
 தவறின்றி அமைக்கும்போது, தமிழைத் தவறின்றி எழுதமுடியாதா? ஆங்கிலத்தை 
 அறிந்துகொண்ட நாம் தமிழை அறிய இயலாதா? அப்படியொரு மொழி வெறிக்குப் 
 பதில் அறிவு உணர்வு பிறக்கட்டுமே! அதற்கு இத்தொகை வகை செய்யட்டுமே!
 
 
-கி. செம்பியன்
 
						