தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 120 -

வைத்திருக்கிறேன். குளித்துவிட்டுச் சாப்பிடு. உன் அப்பனும் இன்னும் உண்ணவில்லை. உன்னோடு உண்ண இருக்கிறார்.” “கண்ணா! இன்றைக்கு ஏழாம் நாள் கண்ணாலம் செய்ய அரிசி முதலியன ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன். பெண்களை வருவித்து முளைபோட்டுவைத்துப் பல்லாண்டு வாழ்த்துக் கூறச் செய்தேன். நீ நாளைமுதல் கன்றுகளின் பின்னே போகாதே. அழகாக அலங்காரம் செய்துகொண்டு இங்கே வீட்டோடு இரு” என்று தன் உள்ளத்துத் தாயன்பை எல்லாம் கொட்டிப் பேசி மகிழ்கிறாள்.

கண்ணனுடைய புல்லாங்குழல் ஊதும் சிறப்புக்கு ஒரு பதிகம், கண்ணனைக் கண்டு ஆயர் மகளிர் காதல்கொள்வதுபற்றி ஒரு பதிகம், கண்ணனின் அற்புதச் செயல்களைக் கண்ட யசோதை அவனைக் குழந்தையாகத் தழுவிப் பால் கொடுக்க அஞ்சுவதுபற்றி ஒரு பதிகம் - இவ்வாறு கிருஷ்ண அவதாரத்தில் ஈடுபாடு கொண்ட இந்தியாவின் மிகப்பழைய இலக்கியச் செல்வம் பெரியாழ்வாரால் பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்குமுன் இனிய தமிழ்பாடல்களாகப் படைக்கப்பட்டுள்ளது.

ஆண்டாள்

பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட மகள் ஆண்டாள். அவர் பாடிய திருப்பாவை புகழ்பெற்றதாகும். கண்ணனுடைய ஆய்ப்பாடியையும் கோபிகளையும் கற்பனையில் உணர்ந்து, தாமும் அந்தப் பெண்களுள் ஒருவராக இருந்து ஆழ்ந்த பக்தியுணர்ச்சியோடு பாடிய பாவைப்பாட்டு இது. சிறப்பாக மார்கழித் திங்களில் திருமால் கோயில்களிலும் வீடுகளிலும் இக்காலத்தில் அன்போடு ஓதப்பட்டுவரும் பாடல் இது.

      “நீண்ட வடிவம் கொண்டு உலகத்தை அளந்த உத்தமனுடைய பெயரைப் பாடி நாம் நம் பாவையைப் போற்றி நீராடினால் தீங்கு இல்லாமல் நாடு முழுவதும் மாதம் மூன்று மழை பெய்யும்; வயலில் செழித்து வளரும் நெற்பயிருக்கு இடையே கயல்மீன்கள் துள்ளி ஆடும். குவளை மலரில் தேன் உண்டு வண்டுகள் மயங்கி உறங்கும். தொழுவத்துள் புகுந்து முலைக்காம்பைப் பற்றிக் கறக்கக் குடம் குடமாகப் பால் நிரப்பும் வள்ளல் தன்மை உடைய பெரிய பசுக்கள் - இவ்வாறு நீங்காத செல்வம் பெருகச் செய்யும் நம் வழிபாடு.”

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்கும் சாற்றிநீர் ஆடினால்
தீங்குஇன்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடு கயல்உகள



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:40:59(இந்திய நேரம்)