தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 255 -

சின்னப்பாபிள்ளை எழுதிய வீரசிங்கன் கதையும் இலங்கை வளர்த்த கதைகளின் முன்னோடிகள்.

வ. த. இராசரத்தினம் கொழுகொம்பு, துரைக்காரன் என்ற நாவல்களை இயற்றியவர். அவர் சிறந்த பல சிறுகதைகளையும் படைத்துள்ளார். ‘தோணி’ என்ற தொகுப்பில் அவற்றைக் காணலாம்.

தமிழ்நாட்டில் ‘மணிக்கொடி’ வாயிலாகச் சிறுகதைகள் வளர்ந்த காலத்தில் இலங்கையில் சிறுகதை வளர்ச்சிக்கு உதவியவர்கள் சிவபாதசுந்தரம், வைத்தியலிங்கம் முதலானவர்கள். நகுலன் எழுதிய சிறுகதைகள் ‘கன்னிப்பெண்’, ‘இப்படி எத்தனை நாள்’ என்ற தொகுதிகளாக அமைந்தன.

‘கொட்டும் பனி’ என்ற சிறுகதைத் தொகுதியை அளித்தவர் கதிர்காமநாதன்.

‘தண்ணீரும் கண்ணீரும்’, ‘பாதுகை’  ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைத் தந்தவர் டொமினிக் ஜீவா. முற்போக்கான நோக்கங்கள் அவருடைய கதைகளில் பொதிந்து கிடக்கும்.

சிவஞானசுந்தரம் ‘இலங்கையர்கோன்’ என்ற இலக்கியப் புனைபெயர் கொண்டு பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். ‘வெள்ளிப் பாதரசம்’ என்ற தொகுதி சிறந்த கதைகள் கொண்டது.

சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய துறைகளில் பலவற்றைப் படைத்துத் தந்தவர் கனக. செந்திநாதன். அவர் திறனாய்வுத் (criticism) துறையிலும் விளக்கங்கள் தந்து வருபவர். அவருடைய ‘வெண்சங்கு’ என்ற சிறுகதைத் தொகுதி பெயர்பெற்றது.

‘நெடுந்தூரம்’ என்ற நாவலும் பல சிறுகதைகளும் இயற்றியவர் டானியல்.

எஸ். பொன்னுத்துரை இருநூறு சிறுகதைகளுக்குமேல் எழுதியுள்ளவர்; ‘வீ’ முதலான சிறுகதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன. ‘தீ’ என்ற நாவல் பாலுணர்ச்சிச் சிக்கல்களை மையமாக வைத்து எழுதப்பட்டது. சில புதிய முறைகளைக் கையாண்டு சிறுகதைகள் எழுதி வெற்றிபெற்றவர் அவர். ‘அணி’ என்ற சிறுகதை, முன்னே ஒருவனை நிறுத்தி அவனுடன் பேசுவது போலவே முழுவதும் அமைந்துள்ளது. இலங்கையில் வெவ்வேறு வட்டாரங்களில் பேசப்படும் வெவ்வேறு வகையான பேச்சுமொழிகளில் சில கதைகளை எழுதியுள்ளார். ‘விலை’ முதலான சிலகதைகளில் நனவோடைமுறையை (stream of consciousness) கையாண்டுள்ளார். கதைமாந்தரின் பேச்சு, பழக்கம், மனநிலை, நெறி தவறிய பாலுணர்ச்சி முதலியவற்றைச் சிறிதும் மாற்றாமல், ஆசிரியராகிய தாம் சிறிதும் அவற்றில் தலையிடாமல், அவற்றை அவ்வாறே கதைகளில் தரும் ஆர்வம் உடையவர்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:18:55(இந்திய நேரம்)