தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாவாணர்நோக்கில் பெருமக்கள்

நண்பர் திரு அ.மதிவாணன், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் பணியாற்றும் முனைவர் இரா.கு.ஆல்துரை, முனைவர் மு.கண்ணன் அவர்களுக்கும், முதுமையிலும் தமிழ்ப்பணி ஒன்றே தம் வாழ்வுப் பணியாக உழலும் புலவர் கி.த.பச்சையப்பன் அவர்களுக்கும் என்றும் நன்றியுடையேன்.

கிடைத்தற்கரிய இவ்வரிய கட்டுரைகளைக் கொடுத்து நூல்களாக வெளிவருவதற்கு உதவிய புலவர் இரா.இளங்குமரனார், பேரா.பூங்காவனம், நண்பர் இளங்கோ, நூல்கள் மேலட்டை மிக அழகாக வருவதற்கு வடிவமைப்புச் செய்து எனக்குப் பெரிதும் துணையிருந்த நண்பர் திரு நாணா, என் மகன் இனியன் ஆகியோருக்கும் எம் நன்றி.

பாவாணரின் அரிய கட்டுரைகளைத் தேடி எடுத்துக் கொடுத்து உதவியதுடன் இத் தொகுப்புகளிலுள்ள கட்டுரைகளை வரிசைப்படுத்தியும், மெய்ப்புப் பார்த்தும் நூலாக்கப் பணிக்கு முழுதும் உடனிருந்து உதவிய இளங்கோ அவர்களுக்கு பெரிதும் நன்றியுடையேன். என் இளவல் கோ.அரங்கராசன் மெய்ப்புத் திருத்தியும், நூல்கள் செம்மையாகவும், நல்ல வடிவமைப்புடனும் வருவதற்கு துணையாயிருந்து உதவியமைக்குப் பாராட்டும் நன்றியும். ‘கணிப்பொறி‘ பொறியாளர் தனசேகர் ஆகிய அனைவருக்கும் எம் பாராட்டும் நன்றியும். நூல்கள் செப்பமுற வெளிவருவதற்குக் காரணமாயிருந்து அச்சடித்துப் புத்தகத்தைக் கட்டுமானம் செய்து கொடுத்த ‘ப்ராம்ட் அச்சகம்‘ உரிமையாளருக்கும், தொழிலாளர்களுக்கும் எம் நன்றி.

நூல்கள் முன்பதிவுத் திட்ட விளம்பரத்தைக் கண்ணுற்ற தனித்தமிழ் ஆர்வலர்கள், குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வாழும் பாவாணர் பேரன்பர்களும், தமிழகத்தில் தனித்தமிழ் ஆர்வலர்களும் என்னைப் பாராட்டி முன்பணம் அனுப்பிவைத்து உதவினர். இவர்கள் காலத்தால் செய்த உதவிதான் எனது பணிக்கு உந்துதலாக இருந்தது. இவர்களுக்கு நான் என்றென்றும் கடப்பாடுடையேன்.

நூல் வெளியீட்டின் நோக்கம்

இளமைதொட்டு மொழி யுணர்வும், இன உணர்வும்,


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 18:21:59(இந்திய நேரம்)