தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Valam


x
தமிழ் வளம்
முனைவர் பெ.அர்த்த நாரீசுவரன், சி.அரசிறைவன், குடந்தைக் கதிர். தமிழ்வாணன், புலவர் த.ச.தமிழனார் போன்ற பெருமக்கள் மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் வெளிவருவதற்கு எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து எனக்குத் துணையிருந்த பெருமக்களாவர். இவர்களின் தமிழ்மொழி, இன, நாட்டுணர்வுக்குத் தலைவணங்கி என் நன்றியை அவர்களுக்கு இந்த நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
நூலாக்கப் பணிக்கு உதவியோர்
இந் நூல்கள் வெளிவருவதற்கு எனக்குத் துணையாயிருந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து நூல்கள் வடிவமைப்பிலும், திருத்தத்திலும் ஒவ்வொரு நிலையிலும் என்னோடு இருந்து இரவும் பகலும் அயராது உழைத்த அருமை நண்பர் திரு அ.மதிவாணன், அவர் துணைவியார் இராணி அம்மையார், கடைசி நேரத்தில் நூல்களில் எந்தப் பிழையும் நேராது நூல்கள் செப்பமுற வெளிவருவதற்குத் தம் பணி நெருக்கடிகளுக்கிடையிலும் அனைத்து நூல்களையும் சரிசெய்து எனக்கு உதவிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் பணியாற்றும் முனைவர் இரா.கு.ஆல்துரை, மு.கண்ணன் ஆகியோருக்கும் என்றும் நன்றியுடையேன்.
கிடைத்தற்கரிய இந்த நூல்களை மறுபதிப்புச் செய்வதற்கும் வழங்கிய புலவர் இரா.இளங்குமரனார், திரு.குழந்தைவேலன், படங்கள் கொடுத்து உதவிய பாவாணர் மகனார் திரு.மணி, பாவலரேறு பெருஞ்சித்திரனார் மக்கள் திரு. பூங்குன்றன், திரு.பொழிலன், மேலட்டை மிக அழகாக வருவதற்கு வடிவமைப்புச் செய்து எனக்குப் பெரிதும் துணையிருந்த நண்பர் திரு நாணா ஆகியோருக்கும் நன்றி உடையேன்.
புலவர் கி.த.பச்சையப்பன், முனைவர் தமிழப்பனார், கவிஞர் செவ்வியன் ஆகியோருக்கும், மெய்ப்புத் திருத்தி உதவிய தென்மொழி குணா, புலவர் கதிர், தமிழ்வாணன், சுந்தர், ப.அன்பரசு ஆகியோர்க்கும் என் நன்றி. மேலும் நூல்களுக்கு நண்பர் பாலமுருகன், தனசேகர், இராசா, காலாவதிகுப்புசாமி, பிரியா, இளமதி, அப்துல் இனியன், கட்டமைப்பாளர் தனசேகர் ஆகிய அனைவருக்கும் என் பாராட்டும் நன்றியும், நூல்கள் செப்பமுற

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:06:39(இந்திய நேரம்)