தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Vilaiyadu-மேல்


பதிப்பாசிரியர் உரை
xxxvii

ஊற்றுகளை நாடிக் கண்டுபிடிப்பது போலவும் அறிஞர்களைத் தேடிக் கண்டு பிடித்து அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலை என்று போற்றப்படுகிறதோ அன்றுதான் நாடு உயரும்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்டம்

தமிழக அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை 1974-ல் தொடங்கியது. அது பாவாணரைத் தவைராகக் கொண்டு இயங்கியது. தக்க கட்டமும் ஏந்துகளும் இல்லாது பல இடங்களுக்கு மாற்றப்பட்டது. 74 அகவை கொண்ட பாவாணர் அலுவலகம் சென்றுவர ஊர்தி எதுவும் அளிக்கப்படவில்லை. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு 1981-ல் மதுரையில் நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய பாவாணர் 16.01.1981-ல் மறைந்தார். அவர் விட்டுச் சென்ற செ.சொ.பி.அகரமுதலிப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நான்கு மடலங்கள் வெளிவந்துள்ளன. எஞ்சியவை இனி வரவேண்டும்.
சொன்னிலை
விதை; விதையிலிருந்து முளை தோன்றுகிறது; அம் முனையினின்று வேர் தோன்றி நிலத்தில் காலூன்றுகின்றது; வேர் ஆணிவேராக உறுதி பெறுகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும், பக்க வேரிலிருந்து கல்லிவேர்களும் தோன்றி மரஞ் செழித்து வாழ வகைசெய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும், அதனின்று கிளை, கொப்பு, வளார், இலை தோன்றி யாவருக்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்குப் புலப்படுவதில்லை.
சொன்னிலையும் அப்படியே. சொற்களின் வேர் சொல்லாய் வறிஞர்க்கு மட்டுமே புலப்படும்.
பாவாணர், பெரும்பான்மையான சொற்கள் கட்டடியினின்றே பிறந்தன என்பார். ஆகாரச்சுட்டு, ஈகாரச்சுட்டு, ஊகாரச்சுட்டு என்று முறைப்படி நின்றாலும் ஊகாரச் சுட்டடிப் பிறந்த சொற்களே மிகுதியாதலான் தலைதடுமாறலாக ஊகாரச் சுட்டடி, ஆகாரச் சுட்டடி, ஈகாரச்சுட்டடி என்று வேர்ச்சொற் கட்டுரைகளில் தலைப்பமைத்தார்.
குறில் நெடிலாயிற்று என்பது பலர் கருத்து. நெடிலே குறிலாயிற்று என்பது பாவாணர் கருத்து. இதற்குப் பிற திராவிட மொழிகள் வலுவூட்டுகின்றன.
"உல் என்னும் முதலடி, சொன்முதன் மெய்கள் ஆறொடு கூடிக் குரல், சுல், துல், நுல், புல், முல் என்னும் வழியடிகளைத் தோற்றுவிக்கும்" (வட. வர. முன்னுரை)
உ - உல்
        உ - முளை
        உல் - ஆணிவேர்
குல் - சுல் - துல் - நுல் - புல் - முல் என்பன பக்கவேர். அவற்றினின்று கிளைப்பன சல்லிவேர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:16:57(இந்திய நேரம்)