பெரும்புலவர் அ.நக்கீரன், புலவர் அ.சித்திரவேலன் ஆகிய இப் பெருமக்கள்
இருவரும் என்னைச் செதுக்கியவர்கள். இவர்கள் தோன்றி யிராவிடில் நான்
பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்க முடியாது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னைத்
தமிழுலகம் அறியச் செய்த பெருமைக்கும், நன்றிக்கும் உரியவர்கள் மாமா
பெரும்புலவர் நக்கீரனார் அவர்களும், மாமா புலவர் அ.சித்திரவேலன் அவர்களும்
ஆவர். என் இளமைக் காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். சமூகக் கேடுகள்
மலிந்து சின்னபின்னமாகக் கிடந்த என் ஊர் மக்களை ஒன்றுகூட்டி, கல்வியறிவு
புகட்டி மனிதர்களாய் வாழவைத்த பெருமைக்குரியவர்கள் இவ்விருவரும். எங்கள் ஊரான
உறந்தைராயன்குடிக் காட்டின் வரலாற்றோடு இவர்களின் வரலாறும் பின்னிப் பிணைந்தது.
நான் பொதுவாழ்வில் ஈடுபட்டுத் தமிழ்மொழி, இன, நாட்டு உணர்வு பெறுவதற்கும்,
தந்தை பெரியாரின் கொள்கைகளில் எனக்கு ஆழமான பிடிப்பு ஏற்படுவதற்கும், தனித்தமிழ்
இயக்கத் தந்தை பாவாணர் அவர்களின்பால் எனக்குப் பற்று ஏற்படுவதற்கும் இப்
பெருமக்கள் இருவரும் காரணமாவர்.
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் மான அவமானம் பார்க்காது, தன்னலம் கருதாது தொண்டாற்ற
வேணடும் என்று தமிழர்க்கு இலக்கணமாய் அமைந்த தந்தை பெரியாரின் கூற்றுக்குச்
சான்றாக அமைந்தவர் பெரும்புலவர் நக்கீரனார் ஆவார்; உழை, உயர், உதவு என்ற
பூட்கை உரையை எங்கட்குத் தந்தவர். என்னுடைய இத்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும்
அளித்து என்னை இயக்கிய பெருமக்களுள் முதன்மையானவர்; முதுமைப் பருவத்திலும் கண்களிலும்,
கைகளிலும் வலியும் சோர்வும் ஏற்படும் அளவிற்கு உழைத்து மெய்ப்புப் பார்த்துத்
திருத்தம் செய்து நூல்கள் அனைத்தையும் எழுத்தெண்ணிப் படித்துத் திருத்தங்கள் செய்து
இப்பணிக்காகத் தம்மை ஈகம் செய்த மாமா பெரும்புலவர் நக்கீரர் அவர்களின்
உழைப்பும், வழிகாட்டுதலும் என் வாணாளில் எனக்குத் கிடைத்த பேறாகக் கருதுகிறேன்.
என் வாழ்நாள் முழுவதும் இப் பெருமகனார்க்கு நன்றிக் கடப்பாடுடையேன்.
தனித்தமிழ் இயக்க முன்னோடிகள்
முனைவர் தமிழ்க்குடிமகனார், முனைவர் இரா.இளவரசு, முனைவர் பூங்காவனம், முனைவர்
நாகராசன், முனைவர் இராமர் இளங்கோ, புலவர் இரா.இளங்குமரனார், புலவர் இறைக்குருவனார்,
பேராசிரியர் விருத்தாசலனார், முனைவர் திருமாறன், முனைவர் இளமுருகன், முனைவர்
ந.அரணமுறுவல்,முனைவர் பெ.அர்த்த நாரீசுவரன், சி.அரசிறைவன், குடந்தைக் கதிர்.
தமிழ்வாணன், புலவர் த.ச.தமிழனார் போன்ற பெருமக்கள் மொழிஞாயிறு