vi
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
மேலும் திரு.தேவநேயனார் பதியச் சொல்லும்
ஆசிரியரும் இன்புறுத்தும்
சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு
விழாக்களில் எமது தலைமையின் கீழ் அவர்
சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப்
பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக்
கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில்
ஆழ்த்தின. அவர் வருந்தியுழைத்து ஆராய்ச்சி
செய்துவரும் அறிஞர் ஆதலால் அவரைப் பணியில்
அமர்த்தும் எந்த நிலையத்துக்கும் அவரால்
பேரும் புகழும் கிடைக்கப்பெறும் என்று யாம்
முழு நம்பிக்கையோடு கூறுகின்றோம்.