தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


சில நூல்கள் தமிழ்நாட்டிலுள்ள சில மாவட்டங்களின் தல 
வரலாறுகளை விரிவாகக் கூறுகின்றன. அந்தந்தத் தலங்களின் 
ஆலயச் சிறப்பு, சுற்றுலாச் சிறப்புப்பற்றிச் சிறு நூல்கள் பல 
வெளிவந்துள்ளன. தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையினர்
வெளியிட்டுள்ளனர். பல நூல்கள் தமிழ்நாட்டின் தல வரலாறுகளையும்
பண்பாட்டுச் சிறப்பினையும் அறியப் பெரிதும் துணையாக உள்ளன. 
எனினும் தமிழ்நாட்டிலுள்ள முக்கியத் தலங்களைப்பற்றிக் கூறும் ஒரு
தனிப்பட்ட நூல் இல்லாமலிருந்தது.

திரு. K. R . சீனிவாசன் எழுதிய “Temples of South India ” 
திரு. R. K . தாஸ் எழுதிய “Temples in Tamilnadu ” திரு. பாஸ்கரத்
தொண்டைமான் எழுதிய “வேங்கடம் முதல் குமரிவரை” போன்ற 
நூல்கள் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய ஆலயங்களைப்பற்றி விரிவாகக்
கூறுகின்றன. சுமார் 5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட 
தமிழ்நாட்டில் 89 சதவிதத்தினர் இந்துக்களாக உள்ளனர். 
தொன்றுதொட்டு இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் 
தமிழ்நாட்டில் இந்து ஆலயங்கள் மிகுதியாக இருப்பது இயல்பே. 
எனினும் இந்து ஆலயங்கள்பற்றி மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் 
மொத்த மக்கள் தொகையில் 5 சதவிகிதத்தினராக உள்ள இஸ்லாமிய 
மக்கள், 5.7 சதவிகிதத்தினராக உள்ள கிறித்தவ சமயத்தினர், 
சுமார் 41,000 எண்ணிக்கையைக்கொண்ட சமண சமயத்தினர், 
சுமார் 1150 எண்ணிக்கையைக்கொண்ட புத்த சமயத்தினர் ஆகியோருக்குரிய முக்கிய வழிபாட்டு ஆலயங்களைப்பற்றியும் குறிப்பிடும் ஒரு நூல் தமிழ்நாட்டுப் பண்பாட்டின் ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்தும் 
எனலாம். இந்நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டே “தமிழ்நாட்டின்
தல வரலாறுகளும், பண்பாட்டுச் சின்னங்களும்”
என்ற இந்நூல்
எழுதப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டின் தல வரலாறுகளும், பண்பாட்டுச் சின்னங்களும்”
என்ற இந்நூல் உருவாக இந்நூலாசிரியருக்கு உறுதுணையாக
இருந்தவர்கள்பற்றிக் குறிப்பிட வேண்டியுள்ளது. தமிழ்நாடு மாநிலத்
தொல்பொருள்துறை இயக்குநரான திரு. R . நாகசாமி அவர்களும் உதவி
இயக்குநர் திரு. நடன காசிநாதன் அவர்களும்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:58:48(இந்திய நேரம்)