தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Index Page



ஆய்வுசெய்து அளித்துள்ளமை நூலின் ஆய்வுப் போக்கிற்கு ஏற்புடையதாக
அமைந்து நூலுக்கு மேலும் அழகூட்டுவதை நாம் காண முடிகிறது.

எனவே கே.கே. பிள்ளை அவர்களின் ‘தமிழக வரலாறு மக்களும்
பண்பாடும்’
என்ற இந்நூல் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க
இடத்தைப் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நூலை ஒருமுறை
படிப்போர் இது போன்ற ஒரு வரலாறு 21-ஆம் நூற்றாண்டிற்கு எழுதப்பட
வேண்டுமே என்று விரும்புவர்.

குறிப்பாக இந்நூலுக்குப் பிறகு தெளிவான விளக்கங்களோடும் ஆய்வுப்
போக்கோடும் தமிழக வரலாற்றை, பண்பாட்டைக் கூறுகின்ற ஒரு நூல்
உருவாகவில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

1972-இல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் இந்நூலை முதல்
பதிப்பாக வெளியிட்டது. அதற்குப் பிறகு மறுபதிப்புகளும் வெளியிடப்பட்டன.
இந்நூலின் பெருகிய தேவையைக் கருத்தில்கொண்டு மீண்டும் இதனை
மறுபதிப்பாக வெளியிட இந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. இம்முயற்சியின்
விளைவாக இந்நூலினை வெளியிடுவதில் இந்நிறுவனம் பெருமை அடைகிறது.
இந்நூலை மறுபதிப்புச் செய்து கொள்ள இசைவளித்த தமிழ் வளர்ச்சி -
பண்பாட்டுத் துறைக்கும், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கும் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து வருவதோடு
இந்நூலுக்கு அரியதோர் அணிந்துரை வழங்கிய நிறுவனத் தலைவர்
மாண்புமிகு கல்வி அமைச்சர் முனைவர் மு.தம்பிதுரை அவர்களுக்கு
நிறுவனத்தின் சார்பில் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

நிறுவன வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வரும் தமிழ் வளர்ச்சி-பண்பாடு
மற்றும் அறநிலையத்துறைச் செயலாளர்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 13:06:17(இந்திய நேரம்)