Primary tabs
                  சுதந்திரம் அடைந்தபிறகு, வரலாற்று நிகழ்ச்சிகள்
                  வெகுதுரிதமாக நடைபெற்று
                  வருகின்றன. அவை யாவும் இந்நூலில் இடம்பெறுவது
                  இயலாததாகும்;
                  தேவையுமன்று. எனவே, இன்றியமையாத நிகழ்ச்சிகள்
                  மட்டும் இந்நூலில்
                  குறிக்கப்பட்டுள்ளன. வரலாறு 1981ஆம் ஆண்டு வரையில்
                  எழுதப்பட்டுள்ளது.
                
                  இந்நூலை எழுதும் அரியதொரு வாய்ப்பை எனக்கு
                  அளித்த
                  தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்கும் இந்நூலுள்
                  காணும் படங்களை
                  உதவிய சென்னைக் கோட்டையிலுள்ள தொல்பொருள்
                  ஆராய்ச்சித்
                  துறையினருக்கும் என் உளமார்ந்த நன்றி.
                
- கே.கே. பிள்ளை
 
						