Primary tabs
இத்துணைத் தூண்களையும் இழுத்து நிறுத்திக் கட்டிய மாளிகைக்குள் நம்மை நடமாட வைக்கிறது ‘இளம்பெருவழுதி’ நாடகக் காப்பியம்!
இலக்கிய நுட்பம், காப்பிய உத்தி முதலிய ஓவியத் தூரிகைகளை ஏந்தியிருந்தாலும் - தமிழ் மேம்பாட்டுக் கருத்துணர்ச்சி சுவர் எழுப்புவதில் தான் முடியரசனார் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.
சமகாலச் சூழலைத் தொட்டுக் காட்டும் அவர், ஈழ உரிமைப் போர் நெருப்பும் நம் நெஞ்சில் கனலற வைத்து விடுகிறார். கருத்துச் சோலைகளைக் காட்டியபடியே கதைப்பாதை நீள்கிறது.
சிலையாக நிற்கிறான் இளம்பெருவழுதி! அவன் வாழ்வைக் கதையாக விவரிக்கிறார் முதியவர் ஒருவர். காதால் இளைஞன் ஒருவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். நாமும் கண்ணால் கேட்டபடிக் கதையோடு நகருமாறு காப்பியம் அமைக்கப்பட்டிருக்கிறது.
நகர முடியாதபடி, ஆங்காங்கே கருத்துச் சோலைகள் குறுக்கிட்டு நம் மனத்தை மணத்தால் நிரப்புகின்றன.
வீரம், கல்வி இரண்டில் எது சிறந்தது? வழுதி கேட்கும் வினாவிற்கு விளக்கம் தருகிறார் அமைச்சர் நாகனார்.
“ ஆண்மை பெண்மை ஆயிரு தன்மையுள்
மேன்மையென் றொன்றை விளம்பல் தகுமோ?
செறிதரும் அறிவு செங்கள வலிமை
விரிநீர் வைப்பிற்கு இரண்டும் வேண்டும்.
மறுவறு கல்வி மனநலம் காக்கும்
நிறைவுறு மறமோ நீணிலம் காக்கும்.”