தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இடம் பெற்றிருப்பதே ஆகும். இப்பகுதியில்தான் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர். கோசர் போன்ற பல்வேறு குடிகளும் இப்பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைத் தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு கூறுகளைக் கொங்குநாட்டு வரலாற்றின் மூலமாகவே அறிய முடிகிறது. சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என அனைத்து மன்னர்களும் இப்பகுதியில் ஆட்சி செலுத்தியதை அறிகிறோம்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல்லவ வரலாறு, கொங்கு நாட்டு வரலாற்றிற்கு அடுத்த நிலையில் அமைவதாகும். மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன், ஆகியவர்கள் குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய வரலாறு தனித்த நிலையில்
கூ றத்தக்கதாகும். தமிழில் அவரே விரிவான பதிவுகளை முதல் முதல் செய்தவர் எனலாம். பல்லவ மன்னர்களின் அனைத்து அம்சங்களையும் மேற்குறித்த நூல்களில் அவர் பதிவு செய்துள்ளார். இத்தொகுதியில் மன்னர்களின் வரலாறு தொடர்பானவை மட்டும் தனித்து கொடுக்கப் பட்டுள்ளன.

இலங்கையில் வாழும் தமிழர்கள் குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய செய்திகள் இப்பகுதியில் இணைக்கப் பட்டுள்ளன.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை - 96
ஏப்ரல்2010

வீ. அரசு
தமிழ்ப்பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 02:57:09(இந்திய நேரம்)