Primary tabs
பண்டைத் தமிழக வரலாறு:
ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள்
அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் இறுதி நூல் இதுவாகும். அவரது மறைவிற்குப் பிறகு இந்நூல் வெளிவந்தது. பிராமி எழுத்துக்கள் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூல் இதுவாகக் கருதலாம். 1960 தொடங்கி ஐராவதம் மகாதேவன் இத்துறை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். அவரது ஆய்வுகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். 2004 இல்தான் அனைத்து ஆய்வுகளும் அடங்கிய முழுமையான நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. 1970 களின் இறுதிக் காலங்களில் களஆய்வுசெய்து இந்நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் உருவாக்கியுள்ளார்.
தமிழ் மொழிக்கென உருவாகிய தொல்லெழுத்துமரபுகள் குறித்த முரண்பட்ட கருத்துக்கள் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருவதைக் காண்கிறோம். தொல்லெழுத்தியல்துறை குறிப்பிட்ட மொழியின் பழமைகுறித்து அறிவதற்கான அடிப்படை மூலத்தரவு ஆகும். ஒலிவடிவம், வரிவடிவம் பெறுதல் என்பது அம்மொழியின் தொல்வரலாறு அறிவதற்கு உதவும். தமிழ் X சமசுகிருதம் என்னும் முரண் சார்ந்த கருத்துநிலை உடையோர், பிராமிஎழுத்துக்கள் தொடர் பாகவும் இவ்வகையான முரண்பட்ட கருத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தமது களஆய்வு மூலம் திரட்டிய பிராமி கல்வெட்டுக்களை, தமிழ் தொல்லெழுத்தியலாகவே ஆய்வு செய்துள்ளார். தமிழ் மொழியின் மூல எழுத்து வடிவமாக