தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புத்த சமயம் ஒருகாலத்தில் வெகுமக்கள் சமயமாக இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஜாதகக் கதைகளின் அமைப்புகள் உள்ளன. இக்கதைகள் மனித வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங் களை மிகச் சுவையாகவும் எளிதாகவும் சொல்லுவதாக அமைந்திருக் கின்றன. இக்கதை மரபை உள்வாங்கி வேறுபல சமயங்களிலும் இவ்வகையான கதைகள் உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை - 96
ஏப்ரல்2010

வீ. அரசு
தமிழ்ப்பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)