Primary tabs


கேள்
புதுவது பன்னாளும் பாராட்ட யானும்
இதுவொன் றுடைத்தென எண்ணி அதுதேர
மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட்
பாயல்கொண்டு என்தோள் கனவுவார் ஆய்கோல்
தொல்நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்
கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ
இருமருப் பியானை யிலங்குதேர்க் கோடும்
நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெம்
செய்பொருண் முற்றும் அளவென்றார் ஆயிழாய்
தாமிடை கொண்ட ததுவாயின் தம்மின்றி
யாமுயிர் வாழும் மதுகை இலே மாயில்
தொய்யில் துறந்தார் அவர்எனத் தம்வயின்
நாய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு
போயின்று சொல்லென் உயிர்." (கலி.பாலை.23)
பிரிவுணர்ந்த தலைமகள் தலைமகனுடன் கூறியதற்குச் செய்யுள்
"செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான் றவையெல்லாம்
பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய
அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து
பகன்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகனல்லை மன்ற இனி;
செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி
அன்பற மாறியாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ என்று வருவாரை
என்திறம் யாதும் வினவல் வினவின்
பகலின் விளங்குநின் செம்மல் சிதையத்
தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர்
அவலம் படுதலும் உண்டு." (கலி.பாலை.18)
பிரிவுணர்த்திய தோழிக்குக் கூறியதற்குச் செய்யுள்
"அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே." (குறுந்.20)
"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை" (குறள் - 1151)
என்பதும் அது.
உடன்போக்கு ஒருப்பட்டதற்குச் செய்யுள்
"சிலரும் பலருங் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானற்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
அலர்சுமந் தொழிகஇவ் வழுங்கல் ஊரே."(நற்றிணை - 149)
இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டதற்குச் செய்யுள்
"சேட்புல முன்னிய விரைநடை அந்தணிர்
நும்மொன் றிரந்ததெனன் மொழிவல் எம்மூர்
பாய்நயந் தெடுத்த ஆய்நலங் கவின
ஆரிடை இறந்தனள் என்மின்
நேரிறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே." (ஐங்குறு - 384)
"கடுங்கட் காளையொடு நெடுந்தேர் ஏறிக்
கோள்வல் வேங்கைய மலைபிறக் கொழிய
வேறுபல அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்
கூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள்
நற்றோள் நயந்துபா ராட்டி
எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே." (ஐங்குறு - 395)
தமர் வந்துற்றவழிக் கூறியதற்குச் செய்யுள்
"அறஞ்சா லியரோ அறஞ்சா லியரோ
வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற அருவிக்
கோள்வல் என்னையை மறைத்த குன்றே." (ஐங்குறு - 312)
மீண்டுவருவாள் ஆயத்தார்க்குக் கூறிவிட்டதற்குச் செய்யுள்
"கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரநனி வாரா நின்றனள் என்பது
முன்னுற விரைந்தநீர் உரைமின்
இன்னகை முறுவல் என் ஆயத் தோர்க்கே."
(ஐங்குறு - 397)
பிரிவாற்றாமைக்குச் செய்யுள்
"அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்." (குறள். 1153)
"அஞ்சுவல் வாழி தோழி சென்றவர்
நெஞ்சுணத் தெளித்த நம்வயின்
வஞ்சஞ் செய்தல் வல்லின வாறே."
அரும்பெறற் காதல ரகலா மாத்திரம்
இரும்புதல் ஈங்கை இளந்தளிர் நடுங்க
அலங்குகதிர் வாடையும் வந்தன்று
கலங்கஞர் எவ்வந் தோழிநாம் உறவே."
இவை பிரிந்தார் என்றவழிக் கூறியன.
ஆற்றுவல் என்பதுபடக் கூறியதற்குச் செய்யுள்
"தோளுந் தொடியும் நெகிழ்ந்தன நுதலும்
நெய்யுகு பள்ளி யாகுக தில்ல
யான ஃதவலங் கொள்ளேன் தானஃ
தஞ்சுவரு கான மென்றதற்
கஞ்சுவல் தோழி நெஞ்சத் தானே."
தெய்வம் பராஅயதற்குச் செய்யுள்