Primary tabs


நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே." (பதிற்றுப்பத்து)
கொடுத்தல் எய்திய கொடைமையும் - கொடுத்தலைப்
பொருந்திய
கொடைமையும்.
உதாரணம்
"பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறல்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர்மண் கொண்டு
இனிய செய்திநின் ஆர்வலர் முகத்தே".
(புறம்.12)
அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றமும் -
பகைவர் பலரையும்
அடுத்து மேலிட்டுக் கொன்ற கொற்றமும்.
உதாரணம்
"திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றமர் கடத்தல் யாவது வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடில் மன்னர
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்தவர் தீதுமருங்கு அறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடிகளத்து ஒழிய
அருஞ்சமந் ததைய நூறிநீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே".
(புறம். 93)
மாராயம் பெற்ற நெடு மொழியும் - மாராயமாகிய உவகை
பெற்ற
நெடிய மொழியும்.
உதாரணம்
"துடியெறியும் புலைய
எறிகோல்கொள்ளும் இழிசின
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயற்கெண்டையின் வேல்பிறழினும்
பொலம்புனை ஓடை அண்ணல் யானை
இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது படினே
மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றுங் காண்டிரோ வரவே".
(புறம்.287)
பொருள் இன்று உய்த்த பேர் ஆண் பக்கமும் - பகைவரைப்
பொருளாக மதியாது செலுத்தின பேர் ஆண் பக்கமும்.
உதாரணம்
"ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே." (புறம்.1)
விசைவரு புனலைக் கற்சிறைபோல ஒருவர் தாங்கிய பெருமையும் விசை
கொண்டு வரும் புனலைக் கற்சிறை தாங்கினாற் போல
ஒருவர் தாங்கிய பெருமையும்.
உதாரணம்
"வீடுணர்ந் தார்க்கும் வியப்பாமால் இந்நின்ற
வாடல் முதியாள் வயிற்றிடம் - கூடார்
பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா
இரும்புலி சேர்ந்த இடம்" (புறப்.வஞ்சி.91)
எனவும்,
"வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
ஆழி அனையன் மாதோ என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே" (புறம்.330)
எனவும் வரும்.
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் -
திரட்சி பொருந்தின
பெருஞ்சோற்று நிலையும்.
உதாரணம்
"இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத்து அன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும்
அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரை
தாழடம்பு மலைந்த புணரிவளை ஞரல
இலங்கு நீர் முத்தமொடு வார்துகில் எடுக்கும்
தண்கடற் படப்பை மென்பா லனவும்
காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்
செங்கோட்டு ஆமான் ஊணொடு காட்ட
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழி