Primary tabs


உஞ் சான்றோர் கடன்." (நாலடி.துறவு. 8)
எனவும்,
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
(குறள். 159)
எனவும் வரும்.
பொருளொடு புணர்ந்த பக்கமும் - மெய்ப்பொருள் உணர்ந்த பக்கமும்.
உதாரணம்
"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு" (குறள். 354)
எனவும்.
"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்"
(குறள். 351)
எனவும் வரும்.
இன்னும் பொருளொடு புணர்ந்தபக்கமும் என்றது. அறம் பொருள்
இன்பம்
மூன்றினும் அறனும் இன்பமும் அன்றி ஒழிந்த பொருளொடு
பொருந்திய
பக்கமும் என்றுமாம். பொருளாவது நாடும் அரணும்
பொருளும் அமைச்சும் நட்பும் படையும்.
"படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு"
(குறள். 381)
என்பதனானும் கொள்க. அவையிற்றின் மிகுதி
கூறலும் வாகையாம்
நாடாவது.
"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு."
(குறள். 731)
அரணாவது,
"கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்"
(குறள். 745)
பொருளாவது,
"உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்."
(குறள். 756)
அமைச்சாவது,
"வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு."
(குறள். 132)
நட்பாவது,
"அழிவின் அவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
(குறள். 787)
படையாவது,
"அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்கண் அதுவே படை."
(குறள். 764)
பக்கம் என்றதனால் ஒற்று, தூது, வினைசெயல்வகை, குடிமை,
மானம் என வருவனவெல்லாம் கொள்க . அவற்றுட் சில வருமாறு:-
"கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று."
(குறள். 585)
"கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க தறிவதாந் தூது."
(குறள். 986)
பிறவும் அன்ன. இன்னும் 'பொருளொடு புணர்ந்த பக்கம்'
என்றதனாற் புதல்வர்ப் பேறுங்கொள்க.
உதாரணம்
"படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே."
(புறம். 188)
அருளொடு புணர்ந்த அகற்சியும் - அருளொடு பொருந்தின துறவும்
அஃதாவது, அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை,
புணர்ச்சி
விழையாமை, கள்ளுண்ணாமை, துறவு என்பனவற்றைப்
பொருந்துதலாம்.
அவற்றுள், அருளுடைமை யொழிந்த எல்லாம்
விடுதலான் 'அகற்சி' என்றார்.
அருளுடைமையாவது; யாதானும் ஓர் உயிர்
இடர்ப்படுமிடத்துத்
தன்னுயிர் வருந்தினாற்போல வருந்தும் ஈரமுடைமை.
"அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள."
(குறள். 141)
கொல்லாமையாவது, யாதொன்றையும் கொல்லாமை.
"அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்."
(குறள். 321)
பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றுந்
தீமை இலாத சொலல்."
(குறள். 291)
கள்ளாமையாவது, பிறர்க்குரிய பொருளைக் களவினாற் கொள்ளாராதல்.
"களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்."
(குறள். 287)
புணர்ச்சி விழையாமையாவது, பிரமசரியம் காத்தல்.
"மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றுஞ் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கில்லை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்," (நாலடி, தூய்தன்மை. 1)
கள்ளுண்ணாமையாவது கள்உண்டலைத் தவிர்தல்.
"களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்." (குறள். 928)
துறவாவது , தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்."
(குறள். 341)
காமம் நீத்த பாலும் - ஆசையை நீத்த பக்கமும்.
உதாரணம்
"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய்."
(குறள். 360)
என்று இரு பால்பட்ட ஒன்பதின் துறைத்து
என்று இரண்டு
கூறுபட்ட ஒன்பது துறைத்து.
76. காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பின்னெறி யானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே.
இது, காஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
காஞ்சி
பெருந்திணை புறன்
- காஞ்சி என்னும் திணை
பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம், பாங்கு அருஞ்
சிறப்பின் பல் நெறியானும் நில்லா
உலகம் புல்லிய நெறித்து - அது பாங்