Primary tabs


கழிந்துழிக்காட்சி யாசையினாற் குறியிடத்துச் சென்று ஆண்டுக் காணாது
கலங்கி வேட்கையான்
மயக்கமுற்றுச் செயலற்று நிற்குங் காலத்தினுங்
கூற்று நிகழும் என்றவாறு.
புகான் என்பது முற்று வாய்பாட்டான் வந்த
வினையெச்சம், செய்யுள்
வந்தவழிக் காண்க.
புகாஅக் காலை புக்கெதிர்ப் பட்டுழிப்... கண்ணும் என்பது - தான்
புகுதற்குத் தகுதியில்லாத காலத்துக்கண்
அகம் புக்கெதிர்ப்பட்டுழி
அவரால் நீக்கப்படாத விருந்தின் பகுதியனாகிய வழியும் கூற்று நிகழும்
என்றவாறு, செய்யுள்:
"இரண்டறி களவின் நம்காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோர் அன்னள் வைகறை யானே".
(குறுந்.312)
எனவரும்,
வேளா ணெதிரும் விருப்பின் கண்ணும்-என்பது தலைவி
உபகாரம்
எதிர்ப்பட்ட விருப்பின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு,
அது குறிவழிக்கண்டு கூறுதல். அவ்வழித்
தலைவிக்குக் கூறிய
செய்யுள்:
"சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன
நலம்பெறு கையினென் கண்புதைத் தோயே
பாயல் இன்துணை யாகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீயல துளரோஎன் நெஞ்சமர்ந் தோரே". (ஐங்குறு. 293)
இது தலைவி கண்புதைத்தவழித் தலைவன் கூறியது,
"குருதி வேட்கை உருகெழு வயமான்
வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும்
மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவின் நாள்மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச்சுர நீளிடை
நீ நயந்து வருதல் எவனெனப் பலபுலந்து
அழுதனை உறையும் அம்மா அரிவை
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்ந்த புதிதியல் பாவை
விரிகதிர் இளவெயில் தோன்றி யன்னநின்
ஆய்நலம் உள்ளி வரினெமக்கு
ஏமம் ஆகும் மலைமுத லாறே".
(நற்றிணை. 192)
எனவும் வரும்,
தாளாண் எதிரும் பிரிவினானும் என்பது - தாளாண்மை எதிரும்
பிரிவின் கண்ணும் என்றவாறு, எனவே
நெட்டாறு சேறலன்றி
அணிமைக்கண் பிரிவென்று கொள்க.
"இன்றே சென்று வருவது நாளைக்
குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீசு கொள்ளியிற் பைம்பயிர் துமியக்
காலியற் செலவின் மாலை யெய்திச்
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மாண் ஆகம் அடைந்துவக் குவமே."
(குறுந்.189)
பிரிந்தவழிக் கூறியதற்குச் செய்யுள்:-
"ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் அருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையினம் ஆரும் முன்றில்
புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே".
(குறுந்.235)
எனவும் வரும்.
நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் என்பது நாணந் தலைவி
நெஞ்சினை வருத்துதலானே நீக்கி நிறுத்துதற்கண்ணும் என்றவாறு.
அஃது, அலராகும் என்றஞ்சி நீக்குதல். அவ்வழித் தலைவன் கூற்று
நிகழும்
என்றவாறு, அவ்வழி இவ்வாறு கூறுகின்றது. புனைந்துரையென்று
கருதிக் கூறுதலும் மெய்யென்று கருதிக் கூறுதலும் உளவாம்.
"களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது".
(குறள்.1045)
இது புனைந்துரையென்று கருதிக் கூறியது,
"உறாஅது ஊரறி கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து".
(குறள். 1142)
`ஊரறிந்தகௌவை நன்றே காண்; அதனைக் குற்றமாகக் கொள்ளாது
பெறாது
பெற்ற நீர்மைத்தாகக் கொள்' என்றமையானுந் தமர் வரைவுடன்
படுவர் எனக் கூறியவாறாம், இது மெய்யாகக் கொண்டு கூறியது.
வரைதல் வேண்டி... புல்லிய எதிரும் என்பது- வரைந்து கோடல்
வேண்டித்
தோழியாற் சொல்லப்பட்ட குற்றந்தீர்ந்த
கிளவி பொருந்திய
எதிர்ப்பாட்டுக் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு,
அஃதாவது பின்னுங் களவொழுக்கம் வேண்டிக் கூறுதல்,
"நல்லுரை இகந்து புல்லுரைத் தாஅய்
பெயல் நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே".
(குறுந்.29)
என வரும்,
வரைவுடம் படுதலும்-தோழி கூறிய சொற்கேட்டு
வரைவுடம் படுதற்
கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு,
"ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரித்தனென் அல்லனோ இறையிறை
யானே". (குறுந்.52)
எனவரும்.
ஆங்கதன் புறத்தும் என்பது- அவ்வரைவு நிகழ்ச்சிக் கண்ணுங்
கூற்று நிகழும் என்ற