தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1180


வுயர்திணை மேன. 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோவெனின், இதுவும் உயர்திணையான்
முடியாத, அஃறிணையான் முடியும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. 

உரை:  காலம்,  உலகம்  என்றித்  தொடக்கத்தனவும் உயர்திணை
யெனினும்  உயர்திணைப்  பால்  பிரிந்து  இசையா ; அஃறிணையான்
இசைக்கும் என்றவாறு. 

வரலாறு:

இவற்குக் காலம் ஆயிற்று : . . . . . . காலம்.

உலகம் பசித்தது : . . . . . . . . . உலகம்.

உயிர் போயிற்று : . . . . . . . . . உயிர்.

உடம்பு நன்று : . . . . . . . . . உடம்பு.

* இவற்குத் தெய்வம் ஆயிற்று : . . . . . . தெய்வம்.

இவ் வினை நன்று : . . . . . . . . . வினை.

இவனைப் பூதம் புடைத்தது : . . . . . . பூதம்.

ஞாயிறு எழுந்தது : . . . . . . . . . ஞாயிறு.

திங்கள் எழுந்தது : . . . . . . . . . திங்கள்.

சொல் நன்று : . . . . . . . . . சொல்.

என வரும்.

‘பிறவும்’ என்றதனால், ‘வெள்ளி  எழுந்தது,  செவ்வாய்  எழுந்தது’
என்பன கொள்க.

* ‘இவற்குப் பால் ஆயிற்று’ எனவுமாம். 

இச்   சூத்திரந்  தெய்வஞ்   சுட்டிய   பொருள்  அஃறிணையான்
முடிபேற்றல்  கூறினார்  என்ப  ஒரு  திறத்தார்.  அற்றன்று,  ஈண்டுத்
தெய்வமும்  உள,  மக்களும் உளர் ; இனி, மேற் சூத்திரம், ‘முன்னர்த்
தான்    உணரப்படும்’    என்றவாறு    கூறினார்,   இச்   சூத்திரம்
உயர்திணைப்பொருளே  அஃறிணை முடிபு ஏற்பனவற்றிற்குக் கூறினார்
என்பது.

உலகம்  என்பது  உலகத்தார்    மேற்று   ;   உடம்பு   என்பது
உடம்புடையார் மேற்று என்பது. (58) 

59. நின்றாங் கிசைத்த லிவணியல் பின்றே. 

இச் சூத்திரம் என்னுதலிற்றோ  வெனின்,  ‘குடிமையாண்மை’  (கிளவி
57) என்பதற்குப் புறனடை கூறுதல் நுதலிற்று.

உரை:   இச்  சொல்லப்பட்டவையிற்றுக்கு  நின்றாங்கு  இசைத்தல்
இயல்பின்று என்பது.

எனவே, மேற் சூத்திரத்திற்  சொல்லப்பட்டனவற்றுக்கு  நின்றாங்கு
இசைத்தல் இயல்புமாம் என்பது.

வரலாறு: குடிமை நல்லன், வேந்து செங்கோலன் என வரும். (59)

60. இசைத்தலு முரிய வேறிடத் தான.

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோவெனின்,  இது,   ‘காலம்  உலகம்’
(கிளவி-58) என்பதற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

உரை: வேறிடம் என்பது  வேறு  வாய்பாடு ; வேறு வாய்பாட்டாற்
சொல்ல இசைக்கும், ஓதிய வாய்பாட்டாற் சொல்ல இசையாது என்பது.

வரலாறு: காலன்   கொண்டான்,   உலகத்தார்   பசித்தார்  என
வரும்.(60) 

61. எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே. 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,   ‘இனச்  சுட்டில்லாப்
பண்புகொள்  பெயர்க்கொடை’  (கிளவி-18.)  என்னும் சூத்திரத்திற்குப்
புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

உரை:   மேற்   ‘பண்புகொள்   பெயர்க்  கொடை’  (கிளவி-18.)
வழக்கினுள் இனம்பெற்றே நிற்க என்றான், இனி இனமின்றியும் நிற்கும்
வழக்கினுள் என்றவாறு.

வரலாறு: பெ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:16:42(இந்திய நேரம்)