தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1228


வன பிறவும்    உயர்திணைக்கட்    பன்மையும்   ஒருமையுமாகிய
பாலறிவந்த எல்லாப் பெயரும் உயர்திணைப் பெயராம் என்றவாறு. 

அன்ன   பிறவும்  ஆவன : ஏனாதி, காவிதி, எட்டி, வாயிலான்,
பூயிலான்,   வண்ணத்தான்,   கண்ணத்தான்,   பிறன்,  பிறள்,  பிறர்,
மற்றையான், மற்றையாள், மற்றையார் என்னுந் தொடக்கத்தன. (12) 

164. அதுவிது வுதுவென வரூஉம் பெயரும்
அவைமுத லாகிய வாய்தப் பெயரு
மவையிவை யுவையென வரூஉம் பெயரு
மவைமுத லாகிய வகரப் பெயரும்
யாதுயா யாவை யென்னும் பெயரு
மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பாலறி வந்த வஃறிணைப் பெயரே. 

உரை: நிறுத்த முறையானே   உயர்திணைப்   பெயர்   உணர்த்தி,
அஃறிணைப் பெயர் உணர்த்துகின்றார். 

அது, இது, உது என வருஞ் சுட்டுமுதற்பெயரும், 

அச் சுட்டுப்பெயர்க்கு முதலாகிய சுட்டு முதலாக ஆய்தத்தொடு கூடி
அஃது, இஃது, உஃது என வரும் பெயரும், 

அவை, இவை, உவை என வரும் பெயரும், 

சுட்டு முதலாக அவ், இவ், உவ் என வரும் வகர ஈற்றுப் பெயரும், 

யாது, யா, யாவை என்னும் வினாப்பெயரும் என அப் பதினைந்தும்
பால்விளங்க வரும் அஃறிணைப் பெயராம் என்றவாறு. 

சுட்டு முதலாகிய ஆய்தப் பெயரும், அவை முதலாகிய வகர ஈற்றுப்
பெயரும் அவையல்லது இன்மையின் இவ்வாறு கூறினார். (13) 

165. பல்ல பலசில வென்னும் பெயரு
முள்ள வில்ல வென்னும் பெயரும்
வினைப்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:25:33(இந்திய நேரம்)