Primary tabs

தல் அன்றி, இன்மையை யாண்டும் உணர்த்தாமை காண்க. (34)
* (பாடம்) மன்னிய
தன்னிடம் இல்லதனை இல்லை என்னுமாறு
35.
எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்.
இது
வினாயதன் புறத்துச் சொல் பல்காமல் ‘சொல் தொகுத்து
இறுத்தல்’ என்னுஞ் செப்பு ஆமாறு கூறுகின்றது.
(இ-ள்.) எப்பொருள்
ஆயினும் - யாதானும் ஒரு பொருளை
ஆயினும், அல்லது இல் எனின் - தன்னுழை உள்ளது அல்லதனை
இல்லையெனல் உறுமே எனின், அப்பொருள் அல்லாப் பிறிது பொருள்
கூறல் - அவன் வினாய பொருடன்னையே கூறாது அதற்கு இனமாகிய
பிறிது பொருளைக் கூறி இல்லை என்க, எ-று.
‘நூறு
விற்கும் பட்டாடை உளவோ?’ என்று வினாயினார்க்கு,
‘ஐம்பது விற்கும் கோசிகம் அல்லது இல்லை’, என்றும், ‘பயறுளவோ
வணிகீர்?’ என்றார்க்கு, உழுந்து அல்லது
இல்லை; கொள் அல்லது
இல்லை; என்றும் தன்னுழை உள்ளது அல்லதனை இல்லை என்பான்,
பிறிது பொருளைக் கூறினான்.
‘பயறு
உளவோ?’ என்றவழி அல்லது என்பது ஒழியவும், ‘பயறு
இல்லை; உழுந்து உள,’ என்றால் படும்
இழுக்கு என்னை எனின்,
‘எப்பொருளாயினும்’ என்றது ஐம்பாற்பொருளை ஆகலானும், ‘அல்லது’
என்பது அஃறிணை ஒருமைப்பாற்கு உரித்தேனும் மற்றை நான்கு பாற்
கண்ணும் பால் வழுவாயும் திணை வழுவாயும் மயங்குதலானும், அது
கண்டு அதனை அமைத்தற்கு, ‘எப்பொருள் ஆயினும் அல்லது இல்’
என்றார். ‘அவன் அல்லது, அவள் அல்லது,
அவர் அல்லது, அது
அல்லது, அவை அல்லது’ என வரும்.
‘நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்
யானல தில்லையிவ் வுலகத் தானே,’
(அகம்.268. 8-9)
எனச் சான்றோர் செய்யுளுள் பயின்