தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   510


பொதுப்பெயரான்   கூறினானேனும்,   அப்பெயர்   ‘அவள்’  என்னும்
பொருள் தந்து நின்றவாறு காண்க. 

‘கொய்தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன்
வைகலும் ஏறும் வயக்களிறே!-கைதொழுவல்;
காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ்
சாலேகம் சார நட.’
                   (நன்.சூ.397 உரை) 

‘பொற்பூண் சுமந்த புணர்மென்முலைக் கோடு போழ
நற்பூங் கழலான் இருதிங்கள் நயந்த வாறும்
கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான்
வெற்பூ டறுத்து விரைவின்நெறிக் கொண்ட வாறும்’

(சீவக. 19)

என்றாற்போலப்  பிற செய்யுட்களுள்ளும் பொருட்பெயர் சுட்டுப்பெயர்ப்
பொருளவாய் வருதல் பெரும்பான்மை என்று உணர்க. 

‘வையைக் கிழவன் வயங்குதார் மாணகலம்
தையலாய்! இன்றுநீ நல்கினை நல்காயேல்
கூடலார் கோவொடு நீயும் படுதியே
நாடறியக் கௌவை ஒருங்கு.’

(ந.சூ.397.மேற்)

என்புழிக்   ‘கூடலார்கோ’   என்றாற்போலப்   பின்   பொருட்பெயர்
பொதுவாய்  நில்லாது அப்பொருளையே விளக்கிச் சுட்டாய் நிற்பனவும்
‘ஒன்றென முடித்த’லாற் கொள்க. 

இச்சூத்திரத்திற்குப்   பலருங்   கூறும்  பொருளெல்லாம்  முன்னிற்
சூத்திரத்தாற் பெற்றவாறு காண்க. 

உம்மை, சிறப்பும்மை, அது வேறு பொருள்படுதல் மாலைத்தாயினும்,
பொருள் வேறுபடாது ஒன்றாகும் என்றவாறு. (37) 

* (பாடம்) புரைவதா லெனவே. 

இயற்பெயரும் சுட்டுப்பெயரும் சேர்ந்து வருமுறை

38. இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்யெர்க் கிளவியும்
வினைக்கொருங் கியலும் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்.
 

இஃது ஒரு பொருளை உணர்த்தும் இருபெயர் வழுக் காக்கின்றது. 

(இ-ள்.)  இயற்பெயர்க்  கிளவியும்  சுட்டுப்பெயர்க் கிளவியும்-இயற்
பெயராகிய   சொல்லுஞ்   சுட்டுப்   பெயராகிய சொல்லும், வினைக்கு
ஒருங்கு இயலும் காலந் தோன்றின் - ஒன்றனை ஒன்று

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:20:15(இந்திய நேரம்)