தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   542


நிறம் நன்று’  எனப்  பண்பின்  தொழிலைப்   பண்பு   அடைந்த
பொருட்கு ஏற்றிக் கூறலும்,  ‘இக்குதிரை நடை நன்று’ எனத் தொழிலின்
தொழிலைத்  தொழிலடைந்த  பொருட்கு  ஏற்றிக்கூறலும், ‘இவ்யாறு நீர்
ஒழுகும்’  என  இடத்து   நிகழ்பொருளின்   தொழிலை   இடத்திற்கு
ஏற்றிக்கூறலும், ‘இறைவன்  அருளல்  எம்  உயிர்  காக்கும்; இறைவன்
அருளலின் யாம் உயிர்  வாழ்தும்’  என  எழுவாய்க்குப் பயனிலையாய்
வந்த பெயர்  தானும் எழுவாயாய்ப் பயனிலை கோடலும், அஃது உருபு
ஏற்றலும்,  ஆ  செல்க,  செல்க ஆ, என முன்னும் பின்னும் பயனிலை
நிற்றலும் பிறவுங் கொள்க.
 

‘சிறுமை  பெருமையிற்  காணாது  துணிந்தே’  (நற். 50)   எனவும்,
‘கோஒல் செம்மையிற் சான்றோர்   பல்கி’ (புறம். 117:6)  எனவும் வரும்
பண்புகளும்     பொருள்    இயைபு     இலவேனும்   பெயர்கொள
வருதற்பாற்படுதலும்,   ‘ஆசிரியன்   பேரூர்   கிழான்    செயிற்றியன்
இளங்கண்ணன்   சாத்தன்   வந்தான்’   எனப்   பல  பெயர் ஒருங்கு
எழுவாயாய்  நின்று  ஒரு  பயனிலை  கோடலும்  இதனாற்   கொள்க.
இன்னும்   எழுவாய்  வேற்றுமையின்  விகற்பமெல்லாம் வழக்கினகத்து
அறிந்து இவ்விலேசான் முடித்துக்கொள்க. (5)
 

தொகைப்பெயரும் பயனிலை கொள்ளல்

68. பெயரி னாகிய தொகையுமா ருளவே
அவ்வும் உரிய அப்பா லான.
 

இது, தொகைப்பெயரும் பயனிலை கொள்ளும் என்கின்றது. 

(இ-ள்.) பெயரினாகிய தொகையுமாருளவே-பெயரும் பெயருந் தொ
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:26:14(இந்திய நேரம்)