தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   544


றல்.  செவ்விது   -   அப்பயனிலை    கோடலில்   திரியாவாய்ப்
பயனிலைப்பட்டு நிற்றல். ‘செவ்விது’ எனவே, பிறிது ஏற்றற்குச் செவ்விய
ஆகாமையும் உடைய; அவை நீயிர் என்பதும், ‘அவ்வாய்க்கொண்டான்’
என்பதும் உருபேற்றற்குச் செவ்விய அல்ல.
 

‘கருவூர்க்குச்  செல்வையோ சாத்தா’ என்றவழிச் ‘செல்வல்’ எனவும்,
‘யான் எது செய்வல்?’ என்றவழி,  ‘இது செய்’  எனவும், ‘இவன் யார்?’
என்றவழிப் ‘படைத் தலைவன்,’ எனவுஞ் செப்பியவழி, யான், நீ, இவன்
என்னும் எழுவாய்   வேற்றுமை  வெளிப்படாது நின்று, ‘செல்வல், இது
செய், படைத்தலைவன்’ என்னும் பயனிலை கொண்டவாறு காண்க. (7)
 

உருபு நிற்கும் இடம்

70. கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப. 

இஃது உருபு நிற்கும் இடம் கூறுகின்றது. 

(இ-ள்.) கூறிய முறையின் உருபுநிலை திரியாது-மேல் ஐ ஒடுகு இன்
அது கண் என்று  கூறிய முறைமையை உடைய உருபுகள் தத்தம் நிலை
திரியாது,  பெயர்க்கு  ஈறு  ஆகும்  இயற்கைய என்ப - பெயர்க்கு ஈறு
ஆகும் இயல்புடைய என்று கூறுவர் ஆசிரியர், எ-று.
 

(எ-டு.) சாத்தனை,  சாத்தனொடு,  சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது,
சாத்தன்கண் என வரும்.
 

இவ்விடைச்சொற்கள்  பெயர்க்கு  உறுப்பாகாது  தாம்  என  வேறு
உணரப்பட்டு  இறுதி  நிற்றலின்,  ‘நிலை  திரியாது’  என்றார். எனவே,
வினைக்குத் தாம் என வேறுபடாது நிற்குமாயின. (8)
 

பெயர்க்கு ஓர் இலக்கணம்

71. பெயர்நிலைக் கிளவி
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:26:36(இந்திய நேரம்)