தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   546


ஓசையான் ஆம் 

தொழிற்பெயரும்,  ஓசை  வேறுபாட்டானன்றி  உண்டவன் உண்ணுமது,
என்றாற்போலத் தாமே  பெயராய்க்  காலந் தோன்றி வினைமுதன்மேல்
நிற்குந் தொழிற்பெயரும், ‘கொலைவர் கொடுமரம் தேய்த்தார்’(கலி.12:1.2)
அவன் ஏறிற்றுக்  குதிரை என்றாற்போலச் செயப்படுபொருட்கண் காலங்
காட்டி  நின்ற  தொழிற்பெயரும், யான்  சொன்னவன், *‘உண்பது நாழி’
(புறம்.189:5)  என்றாற்போலச் செயப்படுபொருண்மேல் பெயராய்க் காலந்
தோன்றி   நிற்குந்   தொழிற்பெயரும்,   பிறவாற்றான்  வரும்  பெயர்
வேற்றுமையும் உணர்க. (9)
 

* (பாடம்) உண்பவை. 

இரண்டாம் வேற்றுமையின் பொருள்

72. இரண்டா குவதே,
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ்விரு முதலின் தோன்றும் அதுவே. 

இது முறையே இரண்டாவது இப்பொருட்கண் வரும் என்கின்றது. 

(இ-ள்.) ஐ    எனப்      பெயரிய       வேற்றுமைக்    கிளவி
இரண்டாகுவதே-‘பெயர்  ஐ  ஒடு  கு  இன்  அது  கண்’ (65) என்னும்
சூத்திரத்து  ஐ  எனப்  பெயர்  பெற்ற வேற்றுமைச்சொல் இரண்டாவது
ஆம்;  அது  எவ்வழி  வரினும் - அஃது யாண்டு  வரினும், வினையே
வினைக்  குறிப்பு  அவ்விரு  முதலின்  தோன்றும்-வினைச்சொல்லினும்
வினைக்குறிப்புச்  சொல்லினும்   பிறந்த    செயப்படு    பொருளாகிய
அவ்விரண்டு காரணத்தின்கண்ணும் தோன்றும், எ-று.
 

‘பெயரிய’ என்பது ‘க
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:26:58(இந்திய நேரம்)