Primary tabs

சய்தான்’ என வினை ஒழிந்த காரணங்கள் ஏழானும் நிகழுங்
காரியத்தினையும் தோற்றுவித்து நிற்றலின், ‘இழை’ என்னும் முதனிலைப்
பெயரை வேற்றுமைப் பொருளாக எடுத்து ஓதினார். இப்பொருட்கண்
தோன்றிய ‘செய்தான்’ என்னுங் காரியத்துடன் அல்லது
‘எயிலை’
என்னும் இரண்டாவது முடியாமை உணர்க. என்னை? செய்தற்கு
இழைத்தல் செயப்படு பொருள் நீர்மைத்தாய்க் காரணமாய் நிற்றலானும்,
ஒழிந்த காரணங்கள் தன்கண் நிகழ்ந்து காரியமாந் தன்மை இழைத்தற்
கின்றா மாதலானும் என்பது. இவ்வாறே மேலிற் சூத்திரத்து ஒழிந்த
பொருள்களையும் விரிக்க.
இனி, வினைக்குறிப்பிற்கும் ‘குழையை உடையன்’ என்புழி உடையன்
எனக் கருதுதல் வினை; அக்கருத்தை நிகழ்த்துகின்றான் வினை முதல்;
அக்குழை அவன் கருத்து நிகழ்த்தப்படும் பொருளாய்க் கிடக்கின்ற
தன்மை செயப்படுபொருள். இவ்வாறே ஒழிந்தனவுங் குறிப்பாற் காண்க.
(10)
இரண்டாவதன் பொருள்பற்றிய வாய்பாடுகள்
73.
காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
ஓப்பின் புகழின் பழியின் என்றா
பெறலின் இழவின் காதலின் வெகுளியின்
செறலின் உவத்தலின் கற்பின் என்றா
அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின்