தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   551


வரும். அறுத்தல் முதலியன தன்கண்  நிகழ்வன; சார்தல் முதலியன
தன்கண் நிகழாதன.
 

‘அன்ன பிறவும்’ என்றதனான், ‘பகைவரைப்  பணித்தான்; சோற்றை
அட்டான்; குழையை உடையன், பொருளை இலன்,’  என்றாற்போல்வன
கொள்க.
 

இச்சூத்திரந் ‘தொகுத்த* மொழியான் வகுத்தனர் கோடல்’ (11) 

* (பாடம்) மொழியின் (மரபியல் சூ.110) 

மூன்றாம் வேற்றுமையின் பொருள்

74. மூன்றா குவதே.
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே.
 

இது முறையானே மூன்றாவது இப்பொருட்கண் வரும் என்கின்றது. 

(இ-ள்.) ஒடு    எனப்     பெயரிய      வேற்றுமைக்     கிளவி
மூன்றாகுவதே-மேல் ஒடு  எனப்    பெயர்    கொடுத்து   ஓதப்பட்ட
வேற்றுமைச்  சொல் மூன்றாவதாம்;    அது    வினைமுதல்   கருவி
அனைமுதற்று - அது வினைமுதலுங்   கருவி யுமாகிய   அவ்விரண்டு
காரணத்தையும் பொருளாக உடைத்து, எ-று.
 

மேல்  ‘அதனின் இயறல்’  (13)   முதலியன   ஆன் உருபிற்கேற்ப
உடம்பொடு புணர்த்துச்    சூத்திரஞ்      செய்தலின்,      அதற்கும்
முற்கொண்டஓடு என்பதற்கும் ஆல் என்பதற்கும்  வினைமுதல்  கருவி
கொள்க. ஆன், ஆலாய்த் திரிந்தும் நிற்கும்.
 

வினைமுதல், கருத்தா  என்பன ஒன்று.  கருத்தா  நின்று  தன்னை
ஒழிந்த கருவி முதலிய   காரணங்கள்  ஏழனையும்    காரியத்தின்கண்
நிகழ்த்துதலின், அதனை வினைமுதல் என்றார்.
 

இஃது, இயற்றும் வினைமுதலும்   ஏவும் வினைமுதலும்  என  இரு
வகைப்படும். ‘கொடியொடு துவக்குண்டான்’ என்பது, இயற்று
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:27:54(இந்திய நேரம்)