தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   557


என்ற     கிளவியும் - என்று   சொல்லப்பட்ட   பொருள்களும்,
அப்பொருளும்  -அன்ன  பொருள்களும்,  அதன்  பல என்மனார் -
அநநான்கான் உருபின் கூற்றன என்று கூறுவர் புலவர் எ-று. 

(எ-டு.) கரும்பிற்கு வேலி. 

‘நிலத்துக் கணியென்ப  நெல்லும்  கரும்பும்’ (நான்மணி.9) என்பதும்
அது.   வினை,   உபகாரம்.  ‘சாத்தற்கு  மகள்  உடம்பட்டார்’  இஃது
உடம்படுதல்; ‘சான்றோர் கொலைக்கு உடம்பட்டார்’ என்பதும் அது. 

சாத்தற்கு  கூறு  கொற்றன். கடி சூத்திரத்திற்குப் பொன்: பொன்கடி
சூத்திரமாய்த்   திரியும்   ஆதலின்,   ‘அதுவாகு   கிளவி’  என்றார்.
கைக்கியாப்  புடையது  கடகம்;  உண்டி வெய்யோர்க் குறுபிணி எளிது
(முதுமொழி  77)  என்பதும்  அது.  கூழிற்குக்  குற்றேவல்  செய்யும்.
அவற்கு  நட்டான்.  ‘அவற்குத்தமன்’ என்பதும் அது. அவற்குப் பகை;
‘கள்வார்க்குத்  தள்ளும்  உயிர்நிலை’  (குறள்.  290)  என்பதும் அது.
நட்டார்க்குக்   காதலன்;   ‘புதல்வற்கு  அன்புறும்’  என்பதும்  அது.
வடுகரசர்க்குச்  சிறந்தார் சோழிய அரசர்; ‘கற்பார்க்குச் சிறந்தது செவி,’
என்பதும் அது. 

‘அப்பொருளும்’     என்றதனானே,  இச்சொற்குப்  பொருள் இது.
அவர்க்குச்  சோறு  உண்டு,  நினக்கு வலி வாள், அவ்வூர்க்கு இவ்வூர்
காதம்,   ‘மனைக்குப்பாழ்   வாள்நுதல்   இன்மை.’  (நான்மணி.  20),
‘போர்க்குப்  புணைமன்.’  (பு.வெ.80),  ‘பிணிக்கு மருந்து.’ (குறள்.1102),
‘நாட்டார்க்குத்    தோற்றலை    நாணாதோன்.’   (கலி.   43:  10,11),
‘தன்சீரியல்நல்லாள்  தானவற்  கீன்ற  மைந்தன்’,  அவற்குத் தக்காள்
இவள்,   ‘உற்றார்க்குரியர்  பொற்றொடி  மகளிர்’  (இறை.சூ.14 உரை.)
என்றாற்போல்வன கொள்க. (15) 

ஐந்தாம் வேற்றுமையின் பொருள்

78. ஐந்தா குவதே.
இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்றிது வென்னும் அதுவே.
இது, முறையானே ஐந்தாவது இப்பொருட்கண் வரு

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:29:00(இந்திய நேரம்)